தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பணம், நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் நேற்று தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனக்கு பரிட்சயமான நபரான பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த மோகித் என்பவர் அவரது இரு நண்பர்களுடன் சேர்ந்து தனது விருப்பத்திற்கு மாறாக அழைத்துச் சென்று மீன்பிடி துறைமுகம் அருகே பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.
மேலும் தன்னிடம் இருந்த ரூ.2500 ரொக்கம், கைப்பேசி, இரு வெள்ளி மோதிரங்கள் ஆகியவற்றை அந்த 3 பேரும் பறித்துச் சென்றதாகவும் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிந்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றம்சாட்டப்பட்ட மோகித் (25), ரிதீஷ் (19), மற்றும் ஜெயக்குமார் திலோத் பெர்லி (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.