தமிழக செய்திகள்

சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு- பேருந்தில் அழைத்து வரப்பட்ட த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள்

தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.

சென்னை:

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை இன்று நடத்துகிறது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும் பெரும்பான்மை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிகிறார்.

இதனிடையே, தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்திற்கு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர்.

மகாபலிபுரம் தனியார் விடுதியில் தங்கவைப்பட்டிருந்த த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சுமார் 60 பேர் பேருந்து மூலம் தலைமைச் செலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ.க்கள் மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.