திருச்சி அரசு மருத்துவ மருத்துவமனையில் புதுக்கோட்டைய சேர்ந்த பயிற்சி செவிலிய மாணவி சீதாலட்சுமி, மூக்கு வலி என அனுமதிக்கப்பட்ட நிலையில், தவறான சிகிச்சையால் உயிரிழந்தார்.
தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி செவிலியர்கள் காலை முதலே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும், மாணவியின் குடும்பத்திற்கு உரிய அரசு நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியர் உரியளித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக அறநிலையத்துறை அமைச்சரும் ஸ்ரீரங்கம் எம்எல்ஏவுமான ரமேஷ் போராட்டம் நடத்திய மாணவிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.