சுற்–று–லாத்–துறை நாட்–டின் மொத்த உள்–நாட்டு உற்–பத்–தி–யில் (ஜி.டி.பி.) சுமார் 5.22 சத–வீத பங்–க–ளிப்பை வழங்–கு–கிறது. மேலும், இது கோடிக்–க–ணக்–கான மக்–க–ளுக்கு நேர–டி–யா–க–வும், மறை–மு–க–மா–க–வும் வேலை–வாய்ப்–பு–களை உரு–வாக்–கித் தரு–கிறது. ஆன்–மி–கச் சுற்றுலா, மருத்–துவ சுற்–றுலா, கலா–சார சுற்–றுலா, சூழ–லி–யல் சுற்–றுலா என பல பிரி–வு–களில் இந்–திய சுற்–று–லாத்–துறை உலக அள–வில் வேக–மாக வளர்ந்து வரு–கிறது. உல–கப் பொரு–ளா–தார தர–வ–ரி–சை–யில் இந்–தியா தற்–போது 8-வது பெரிய சுற்–று–லாப் பொரு–ளா–தார நாடாக உரு–வெ–டுத்–துள்–ளது.
இந்–தி–யா–வின் ஒட்–டு–மொத்த உள்–நாட்டு சுற்–று–லாப் பய–ணி–கள் வரு–கை–யில் உத்–த–ர– பி–ர–தே–சம் முதல் இடத்–தி–லும், தமிழ்–நாடு இரண்டாம் இடத்–தி–லும் உள்–ளன. வெளி–நாட்–டுப் பய–ணி–கள் வரு–கை–யைப் பொறுத்–த–வரை மராட்–டி–யம், குஜ–ராத் போன்ற மாநி–லங்–களுக்கு அடுத்–த–ப–டி–யாக தமிழ்–நாடு மிக முக்–கிய இடத்–தைப் பிடித்–துள்–ளது.
ஒட்–டு–மொத்–த–மாக கலா–சா–ரம், ஆன்–மி–கம் மற்–றும் மருத்–து–வச் சிகிச்–சை–க–ளுக்–காக இந்–தியா வரும் சுற்–றுலா பய–ணி–க–ளின் முதன்மை தேர்–வா–கத் தமி–ழ–கம் விளங்–கு–கிறது. தமி–ழக சுற்–று–லாத் துறை–யின் அதி–கா–ரப்–பூர்வ சமீ–பத்–திய புள்–ளி –வி–வ–ரங்–க–ளின்–படி கடந்த ஆண்–டில் மட்–டும் தமிழ்–நாட்–டிற்கு சுமார் 30.80 கோடி உள்–நாட்டு சுற்–று–லாப் பய–ணி–களும் மற்–றும் 11.61 லட்–சம் வெளிநாட்டுச் சுற்–று–லாப் பய–ணி–களும் வருகை தந்–துள்–ள–னர்.
தமி–ழ–கத்–தில் உள்ள 38 மாவட்–டங்–களில் திருச்சிதான் சுற்–றுலா பய–ணி–களை சுண்டி இழுத்து வரு–வதில் முத–லி–டத்–தில் உள்–ளது. மாதத்–திற்கு சுமார் 23 லட்–சம் சுற்–றுலா பய–ணி–கள் திருச்–சிக்கு வரு–கி–றார்–கள். இதற்கு கார–ணம் திருச்சி தமிழ்–நாட்–டின் மத்–திய பகுதி என்–பது மட்–டும் அல்ல. காஷ்–மீர் முதல் கன்–னி–யா–கு–மரி வரை இயக்–கப்–படும் ரெயில்–களில் பெரும்–பா–லா–னவை திருச்சி வழியாக செல்–வ–தும், திருச்–சி–யில் சர்–வ–தேச விமான நிலை–யம் இருப்–ப–தும் ஒரு கார–ணம் ஆகும்.
இது தவிர என்.ஐ.டி, மத்–திய சட்–டப்–பல்–க–லைக்–க–ழ–கம், ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.எம். போன்ற மத்–திய அர–சின் கல்வி நிறு–வ–னங்–கள், பாரத மிகு மின் நிலை–யம் (பெல்), துப்–பாக்கி தொழிற்–சாலை போன்ற தொழில் நிறு–வ–னங்–கள் திருச்–சி–யில் அமைந்து இருப்–ப–தும், சென்னைக்கு நிக–ராக நவீன வச–தி–கள் கொண்ட மருத்–து–வ–ம–னை–கள், ஆசி–யா–வி–லேயே உய–ர–மான கோபு–ரத்தை கொண்ட ஸ்ரீரங்கம் ரெங்–க–நா–தர் கோவில், வானு–யர எழுந்து நிற்–கும் மலைக்–கோட்டை, சக்தி தலங்–களில் முதன்–மை–யான சம–ய–பு–ரம் மாரி–யம்மன் கோவில், புனித லூர்து அன்னை ஆல–யம், நத்–தர் வலி தர்கா உள்–ளிட்ட வழி–பாட்டு தலங்–க–ளை–யும் தன்–ன–கத்தே அடக்கி இருப்–ப–தால் திருச்–சியை நாடி சுற்–றுலா பய–ணி–கள் அதிக அள–வில் வருகை தந்த வண்–ணம் உள்–ள–னர்.
முக்–கொம்பு மேலணை, புளி–யஞ்–சோலை, பச்–ச–மலை, வண்–ணத்து பூச்சி பூங்கா, பற–வை–கள் பூங்கா, ரெயில் மியூ–சி–யம், அரசு அருங்–காட்–சி–ய–கம், அண்ணா அறி–வி–யல் மைய கோள–ரங்–கம் ஆகி–யவை திருச்சி மாவட்–டத்–தில் உள்ள முக்–கிய சுற்–றுலா மையங்–க–ளா–கும்.
இதுகுறித்து சுற்–று–லாத்–துறை அதி–கா–ரி–கள் கூறு–கை–யில், திருச்–சி–யில் இருந்து தமி–ழ–கத்–தின் எந்த ஊருக்–கும் குறிப்–பாக சென்னை, மதுரை, நாகப்–பட்–டி–னம், கோவை ஆகிய நக–ரங்–க–ளுக்கு செல்–வ–தற்–கான நான்கு வழிச்–சாலை வசதி உள்–ளது. இது கார் உள்–ளிட்ட வாக–னங்–களில் பய–ணிப்–ப–வர்–க–ளுக்கு மிக–வும் பய–னுள்–ள–தா–கும்.
ஒரு இடத்–தில் இருந்து இன்–னொரு இடத்–திற்கு எளி–தாக செல்–வ–தற்–கான வச–தி–களும், அமை–தி–யான சூழ–லும் திருச்–சி–யில் தான் உள்–ளது. அத–னால் தான் சென்–னையை தாண்டி திருச்சி முத–லி–டத்தை பிடித்–துள்–ளது. மேலும் திருச்–சி–யில் சுற்–றுலா பய–ணி–கள் தங்–கு–வ–தற்–கான சர்–வ–தேச தரத்–தி–லான நட்–சத்–திர விடு–தி–கள் அமைந்–தி–ருப்–ப–தும் ஒரு முக்–கிய கார–ணம். மெட்ரோ ரெயில்–சேவை உள்–ளிட்ட வச–தி–களை ஏற்–ப–டுத்தி கொடுத்–தால் சுற்–றுலா மூலம் திருச்சி மேலும் வளர்ச்சி அடை–யும் என்–ற–னர்.