திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களில் 7 பேர் சிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது போக்சோவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.