2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் தற்போதைய முதலமைச்சராக இருக்கும் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டார். இதில் இரண்டிலுமே வெற்றிப்பெற்ற நிலையில், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவே தொடர்வதாக அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு பெயர் இடம்பெற்றுள்ளது.
பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய நடைமுறை. இதனால் விரைவில் அங்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.