தமிழக செய்திகள்

திருச்சியில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் தொல்லை தந்த கார் ஓட்டுநர்

கார் ஓட்டுநர் மாரிசெல்வனை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

திருச்சியில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து கார் ஓட்டுநர் பாலியல் தொல்லை தந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சியில் 14 வயது சிறுமி ஒருவர் தனது தோழியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். தோழியின் தாயார் வெளியூர் செல்வதற்காக வாடகை கார் ஒன்றை வரவழைத்துள்ளார்.

அந்த காரை ஒட்டி வந்த மாரிசெல்வன் (43) என்பவர் சிறுமியிடம் பேசி தனியாக அழைத்துச் சென்று மது ஊற்றி கொடுத்து பாலியல் தொல்லை தந்துள்ளார்.

சிறுமி சுயநினைவின்றி மதுபோதையில் கீரைக்கடை பகுதியில் விழுந்து கிடந்துள்ளார்.

சிறுமி மீட்கப்பட்டு மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு நேர்ந்ததை அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கார் ஓட்டுநர் மாரிசெல்வனை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

மாரிச்செல்வனை காவலில் எடுத்த போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.