தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின் உதவியாளர் கைது

எஸ்.எஸ். சிவசங்கர் கடந்த திமுக ஆட்சியின் கால கட்டத்தில் மாநில போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக எஸ்.எஸ். சிவசங்கர் இருந்து வருகிறார்.

இவர் கடந்த திமுக ஆட்சியின் 2022 முதல் 2026 கால கட்டத்தில் மாநில போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். மேலும் அவருக்கு கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறையும் வழங்கப்பட்டது.

அப்போதைய திமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று சென்னையில் கைது செய்தனர்.

அவரிடம் பணம் எவ்வாறு வாங்கி கைமாறியது என்றும், இதுவரையில் எவ்வளவு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.