தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-2027ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்), திருநர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் முக்கிய சமூக நல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
திருநர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம், உணவு, உளவியல் ஆலோசனை மற்றும் சட்ட உதவிகள் வழங்கும் வகையில் மேலும் 5 முக்கிய மாவட்டங்களில் 'அரண்' காப்பகங்கள்/தங்குமிடங்கள் புதிதாக அமைக்கப்படும்.
திருநர்களின் தொழில்முனைவை ஊக்குவிக்கவும், அவர்களின் சுயமரியாதையுடனான வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வங்கிகள் மூலம் தொழில் தொடங்க ரூ.50,000 வரை மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும்.
சுயதொழில் தொடங்க விரும்பும் திருநர்களுக்கு சிறப்புத் தொழிற்பயிற்சிகளும், தொழில்முனைவோர் பயிற்சிகளும் அரசு சார்பில் வழங்கப்படும்.அசமூகத்தில் திருநர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களை முதன்மைச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.