தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் கார்த்தி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, காலிப்பணியிட ஒதுக்கீடு தலைமை அலுவலகத்தின் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் டி.என்.ஹரி கிரண் பிரசாத், ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக இருக்கும் ஜி.சந்தீஷ், பெருநகர சென்னை காவல்துறையின் தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறையின் தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றி வரும் கே.முத்துகுமார், ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்துத் துணை ஆணையராக பணியாற்றி வரும் டி.ஈஸ்வரன், பள்ளிக்கரணை, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் துணை ஆணையராக, முன்பு காலியாக இருந்த பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.