திருச்சியில் விபத்து  
தமிழக செய்திகள்

திருச்சியில் ஆம்னி வேன் மரத்தில் மோதி கோர விபத்து - 8 பேர் உயிரிழப்பு

காதணி விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு காரில் ஊர் திருப்பிக் கொண்டிருந்தனர்.

முசிறி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் மரத்தில் மோதிய விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த 10 பேர் நாமக்கல்லில் நடைபெற்ற காதணி விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு ஆம்னி வேனில் ஊர் திருப்பிக் கொண்டிருந்தனர்.

விபத்து

திருச்சி மாவட்டம் துறையூர் - முசிறி சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே வந்தபோது , திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதியது.

மோதிய வேகத்தில் கார் பலத்த சேதமடைந்த நிலையில், காரில் பயணம் செய்த மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ், பாவாடை ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெம்புநாதபுரம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம்

படுகாயமடைந்த சக்திவேல், சுப்பிரமணி உள்ளிட்ட 4 பேர் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சக்திவேல், சுப்ரமணி, சீதாராமன் ஆகிய 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். வேனில் பயணித்த 10 பேரும் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT