தமிழக செய்திகள்

மன்னார்குடி அருகே சோகம்: பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 3 பேர் பலி

பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பள்ளி முடிந்து மாலை மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது பள்ளிக்கு அருகே வந்த கார் ஒன்று, அவ்வழியாக நடந்துசென்ற மாணவர்கள்மீது மோதியுள்ளது. இதில் லோகேஷ்(12), ரக்ஷித் (13) உள்பட மூன்று மாணவர்கள் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி சென்ற மாணவர்கள் கார்மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.