தமிழ்நாடு செய்திகள்

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு: ஆட்டோ டிரைவர்களுடன் போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. வாகன ஓட்டுனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆட்டோ மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டு நர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்டோ மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்து லட்சுமி, கண்காணிப்பாளர் செந்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் மற்றும் வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.