தமிழக செய்திகள்

ஊட்டி-மேட்டுப்பாளையம் ரோட்டில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி–மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ராட்சத மரம், மின்கம்பிகள் விழுந்ததையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி மலைப்பாதையில் கனமழை காரணமாக மண்சரிவு மற்றும் மின்விபத்துக்கு வாய்ப்பு இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் எச்சரிக்கையுடன் கவனமாக செல்ல வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மண்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளன.

மரம் விழுந்தது

இந்த நிலையில் ஊட்டி–-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒரு ராட்சத மரம் திடீரென முறிந்து நடுரோட்டில் விழுந்தது. இத்துடன் அதே வழித்தடத்தில் இருந்த மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன.

இதுகுறித்து தகவலறிந்ததும் தீயணைப்புத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதன்பிறகு அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மலைப்பாதை

தொடர்ந்து மலைப்பாதையில் நடுரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.

மேலும் அங்குள்ள மின்கம்பிகளை சீரமைத்து தடைபட்ட மின்வினியோகத்தை சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன

போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி–மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ராட்சத மரம், மின்கம்பிகள் விழுந்ததையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் அந்த சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஊட்டி மலைப்பாதையில் கனமழை காரணமாக மண்சரிவு மற்றும் மின்விபத்துக்கு வாய்ப்பு இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் எச்சரிக்கையுடன் கவனமாக செல்ல வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT