போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்குன்றம் அண்ணா பஸ் நிலையத்தின் வெளிப்புறத்தில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுவதால், மாநகர பஸ்கள் பேருந்து நிலையத்திற்குள் திரும்பிச் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும், பஸ்கள் திரும்பும் பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு, பஸ் நிலையத்தின் வெளிப்புறத்தில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.