தமிழக செய்திகள்

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் போரூர் சுங்கச்சாவடியில் மதுரவாயல் நோக்கியும், ராமாபுரம் சந்திப்பில் அரசமரம் சந்திப்பு நோக்கியும் திருப்பி விடப்படும்.

பிரதமர் மோடி நாளை (ஞாயிற்ருக்கிழமை) சென்னை வருகை தருவதை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் வணிக மற்றும் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் செய்து அறிவித்துள்ளனர். இந்த மாற்றம் நாளை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை அமலில் இருக்கும்.

வாகனங்கள்

அதன்படி ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் குன்றத்தூர் சாலையை நோக்கியும், பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் விமான நிலைய சந்திப்பு ஹோட்டல் ஏர்வே அருகே தாம்பரத்தை நோக்கித் திருப்பி விடப்படும். ஜே என் 100 அடி சாலையில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்களில் கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் அசோக்நகர்-2வது அவென்யூவில் கோயம்பேடு அல்லது கே.கே.நகர் நோக்கி செல்லுமாறும், அசோக் பில்லரிலிருந்து வரும் வாகனங்கள் சிபெட் சந்திப்பில் கிண்டி தொழிற்பேட்டை நோக்கியும் திருப்பி விடப்படும்.

போரூர் சுங்கச்சாவடி

மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் போரூர் சுங்கச்சாவடியில் மதுரவாயல் நோக்கியும், ராமாபுரம் சந்திப்பில் அரசமரம் சந்திப்பு நோக்கியும் திருப்பி விடப்படும். ஓ.எம்.ஆர். மற்றும் சர்தார் படேல் சாலையிலிருந்து வரும் வாகனங்கள், காந்தி மண்டபம் சந்திப்பில் சி.பி.டி. நோக்கியும், காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள், காந்தி மண்டபம் சந்திப்பில் சி.பி.டி. நோக்கி திருப்பி விடப்படும்.

வேளச்சேரி

வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து சர்தார் படேல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், குரு நானக் சந்திப்பில் வேளச்சேரி நோக்கி திருப்பி விடப்படும். அண்ணா சாலையிலிருந்து லோக் பவன் நோக்கி வரும் ராஜா யூ-டர்ன் பகுதியில் அண்ணா சாலை திசையிலேயே திருப்பி விடப்பட்டு செல்ல அனுமதிக்கப்படும்

இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும், பரிந்துரைக்கப்பட்ட மாற்றுப் பாதைகளைப் பின்பற்றுமாறும், அதற்கேற்ப தங்கள் பயணங்களை திட்டமிடுமாறும் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT