தமிழக செய்திகள்

மணலி விரைவுச் சாலையில் வியாபாரிகள் ‘திடீர்’ மறியல்

வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஆத்திரமடைந்த வியாபாரிகள் திடீரென மணலி விரைவு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர், சத்திய மூர்த்தி நகர் சாலையோரத்தில் ஏராளமான வியாபாரிகள் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மண்டல அதிகாரிகள் நேற்று இரவு சத்தியமூர்த்தி நகர் பகுதிக்கு வந்து அங்கு சாலை ஓரம் வியாபாரம் செய்து கொண்டு இருந்து வியாபாரிகளிடம் திடீர் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தி அபராதம் விதித்தனர்.

மறியல்

இதனால் வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஆத்திரமடைந்த வியாபாரிகள் திடீரென மணலி விரைவு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சாத்தாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT