டிராக்டர் கவிழ்ந்து கிடக்கும் காட்சி. 
தமிழக செய்திகள்

கடம்பூர் மலைப்பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

டிராக்டரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 2 பேர் சாலையில் குதித்து தப்பிவிட்டனர். வேலுமணி வெளியே குதிப்பதற்குள் டிராக்டர் முழுவதுமாக கவிழ்ந்தது.

Suresh K Jangir

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை கடம்பூரில் இருந்து கே.என். பாளையத்தை நோக்கி டிராக்டர் ஒன்று ஹலோ பிளாக் கற்களை ஏற்றுவதற்காக சென்று கொண்டு இருந்தது. டிரைவரின் முன் பகுதியில் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த வேலுமணி (21) உள்பட 3 பேர் அமர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

கடம்பூர் சாலையில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டரின் மெயின் ஆக்சில் முறிந்ததால் டிராக்டர் நிலை குலைந்து கவிழ முயன்றது. அப்போது டிராக்டரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 2 பேர் சாலையில் குதித்து தப்பிவிட்டனர். ஆனால் வேலுமணி வெளியே குதிப்பதற்குள் டிராக்டர் முழுவதுமாக கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே வேலுமணி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேலுமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.