தமிழக செய்திகள்

மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் மிதமாக விழுந்து வருகிறது.

புலி அருவி, சிற்றருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் குளிக்கும் அளவிற்கு மிதமாக தண்ணீர் விழுந்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காலநிலை நீடிக்கிறது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது.

ஐந்தருவி

குறிப்பாக புலி அருவி, சிற்றருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் குளிக்கும் அளவிற்கு மிதமாக தண்ணீர் விழுந்து வருகிறது. மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் மிதமாக விழுந்து வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT