தமிழக செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி பகுதியில் நேற்று கனமழை பெய்தது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மாலை மலர்

நெல்லை:

அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் இன்று அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால் அருவியை பார்வையிட அனுமதி வழங்கி உள்ளனர்.