திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4 சுற்றுலா தலங்களை கட்டணமின்றி காணலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
* கொடைக்கானலில் மே 31-ந்தேதி வரை 4 சுற்றுலா தலங்களை கட்டணமின்றி காணலாம்.
* தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களை கட்டணமின்றி காணலாம்.
* கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* சாலை போக்குவரத்தினை எளிதாக்கும் வகையில் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி சுற்றுலா தலங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.