தமிழக செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

எழும்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்யாத நாட்களில் வெயிலின் வெப்பத் தாக்கமும் கொளுத்துகிறது.

இந்நிலையில் இன்று திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

அண்ணாசாலை, போரூர், பூந்தமல்லி, மாங்காடு, திருவேற்காடு, எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் மழை பெய்தது.

காலையில் இருந்து வெயில் அடித்தநிலையில், மாலையில் வந்த திடீர் மழை நிலவிய வெப்பத்தைத் தணித்து மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.