சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (06.06.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
குமரன் நகர், செங்கலம்மன் நகர், விஜயநல்லூர், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன்.
பழைய சந்தை, பம்மல் பிரதான சாலை, அப்துல் பாரூக் தெரு, காமராஜர் நெடுஞ்சாலை, தெய்வசிகாமணி தெரு, முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், அரங்கநாதன் தெரு, தேவராஜன் தெரு, சோழன் தெரு, இஸ்ரோ விருந்தினர் மாளிகை, ரேடியன்ஸ்.
தேர்வாய்கண்டிகை, சிப்காட், கோபால் ரெட்டி, பொள்ளனூர், புதுநகர், கரடிபுத்தூர், புத்தூர், என்.எம். கண்டிகை, கண்ணன்கோட்டை, பாஞ்சாலை, அமரம்பேடு, அக்ரஹாரம், தாணிப்பூண்டி, பெரியபுலியூர், சிறுவாடா, பூவலம்பேடு.
சரஸ்வதி நகர், கல்கி நகர், விநாயகபுரம், ஏ.ஜி.எஸ். காலனி 4-வது முதல் 10-வது பிரதான சாலைகள் வரை, ஆண்டாள் நகர் 2-வது மற்றும் 3-வது பிரதான சாலைகள், எஸ்.தெல். ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகள், டி.ஆர்.ஏ. சல்மா அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ரெடிங்டன்.
ஐ.பி.எஸ். காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பக்கம், ராமச்சந்திர நகர், கெருகம்பாக்கம், நெசப்பாக்கம்.