சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (24.05.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
சிட்கோ தொழிற்பேட்டை, செக்டர் 3-இல் உள்ள 1வது குறுக்கு பிரதான சாலை, 1 மற்றும் 2வது லேன், 2 மற்றும் 3வது தெரு, பஜனை கோவில் தெரு, நல்ல கிணறு தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, குள்ளன் தெரு, பாடசாலை தெரு, கோரமண்டல் டவுன், சி.டி.எச். சாலை, மேனாம்பேடு சாலை, சிட்கோ தொழிற்பேட்டை 10 மற்றும் 11வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
முகப்பேர் 2வது பிரதான சாலை, ரெட்டிப்பாளையம் பிரதான சாலை, முகப்பேர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர் சாலையில் பின்புறம் உள்ள C19, C18, C15 மற்றும் C16 பகுதிகள், அம்பத்தூர் தொழிற்பேட்டை (தெற்கு பகுதி) உள்ளிட்ட பகுதிகள்.