சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (14.08.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
டி.எச். சாலை, ராஜா கடை, திருச்சினாங்குப்பம், கன்னிகோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, கணக்கர் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, மார்கெட் லேன், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, சாத்தாங்காடு பகுதி, நியூ தெரு, வசந்தா நகர், ஜான்ரவார் தெரு, ஐய்யப்பள்ளி தோட்டம், ஷேசாச்சல கிராமணி தெரு, திலகர் நகர், சின்னமேட்டுபாளையம், பெரியமேட்டுபாளையம், மேற்கு மற்றும் வடக்கு மாட வீதி, பிகேஎன் காலனி, வீரராகவன் தெரு, குமரன் நகர், கோமாதா நகர், பிபிடி சாலை.