அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம். `பக்ரீத்’ திரு நாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த `பக்ரீத்’ திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக்கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்ற தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத்தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
கொடையும், தியாகாமும் தான் உலகில் சிறந்தவை என்பதை உணர்த்தும் எந்தத் திருவிழாவும் உலகில் அனைவருக்குமான திருவிழா தான். அந்த வகையில் பக்ரீத் திருநாளை அனைவரும் கொண்டாட வேண்டும்; அது சொல்லும் பாடங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். உலகம் முழுவதும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமை, மகிழ்ச்சி, வளம் உள்ளிட்டவை செழிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச்சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.
இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு ம.தி.மு.க. சார்பில் என் இதய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
மனிதாபிமானம், மேலான அன்பு, பொறுமை, ஈகை ஆகியவற்றின் அடிப்படையில் தன்னலமற்ற நிலையில் உருவாகுவதுதான் தியாகம். இந்நன்னாளில் நபிகள் (ஸல்) நாயகம் போதித்த சாந்தி, சமாதானம், மன்னிப்பு, மனித நேயம், அன்பு ஆகியனவற்றை சாதி, மத, மொழி, இன பாகுபாடுகளை தாண்டி கடைபிடித்து மனித சமுதாயம் தழைத்தோங்கவும், சகோதரத்துவம், சகவாழ்வு எனும் நபிகள் நாயகம் காண்பித்த நன்னெறியினை பின்பற்ற இத்தியாகத் திருநாளில் சூளுரைப்போம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தியாகத் திருநாளில் பக்ரீத் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாகத் திருநாளில் புத்தாடை அணிந்து, மசூதிகளில் சிறப்புத்தொழுகைகள் செய்து, இறைவழிகாட்டுதல் படி குர்பானி கொடுக்கப்பட்டு, அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் உணவளித்து, ஏழை எளிய மக்களுக்கும் உதவுவது தனிச்சிறப்பு. தியாகத்தையும், ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மையையும், மனிதநேயத்தையும் வலியுறுத்தும் பக்ரீத் பெரு நாள் இஸ்லாமியர்களுக்கு நன்னாள்.
இஸ்லாமிய பெருமக்கள் முன்னேற்றம் அடைந்து, மகிழ்ச்சியுடன் வாழ பக்ரீத் பண்டிகை நல்வழிகாட்ட வேண்டும். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளனர்.