தமிழக செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்தது

மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.40 வரையிலும் வெளிமார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாகவே 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் 550 லாரிகளில் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ரகத்தை பொறுத்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10முதல் ரூ.15 வரை விற்பனை ஆகிறது.

விலை நிலவரம்

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கிருந்து வரும் நாசிக் வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து வெங்காயம் ஒரு கிலோ ரூ.26 முதல் ரூ.35 வரை விற்கப்படுகிறது. மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.40 வரையிலும் வெளிமார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்ற அவரைக்காய் வரத்து குறைவால் விலை அதிகரித்து ரூ.60-க்கும், ஒரு கிலோ ரூ.40-க்கும் விற்ற முருங்கைக்காய் விலை அதிகரித்து ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விவரம் (கிலோவில்) வருமாறு:-

கத்தரிக்காய்-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.35, பீன்ஸ்-ரூ.70, அவரைக்காய்-ரூ.60, ஊட்டி கேரட் ரூ.55, பீட்ரூட்-ரூ.30, கோவக்காய்-ரூ.25, கொத்தவரங்காய்-ரூ.30, முட்டை கோஸ்-ரூ.20, சின்ன வெங்காயம்-ரூ.30 முதல் ரூ.70 வரை.