தமிழக செய்திகள்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 6 ஏப்ரல் 2026: சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-23 (திங்கட்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி : சதுர்த்தி நண்பகல் 1.48 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : அனுஷம் பின்னிரவு 2.21 மணி வரை பிறகு கேட்டை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருமயிமலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம்

இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. திருவெள்ளறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் பவனி. ஸ்ரீ சென்னமல்லீசுவரர் விடையாற்று உற்சவம். திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் வெள்ளி சப்பரத்தில் பவனி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மின்விளக்கு தீப அலங்கார ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. கீழ்த்தி ருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்தியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருமயிமலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-களிப்பு

ரிஷபம்-இன்சொல்

மிதுனம்-புகழ்

கடகம்-ஆதரவு

சிம்மம்-கவனம்

கன்னி-கடமை

துலாம்- பக்தி

விருச்சிகம்-ஆர்வம்

தனுசு- ஜெயம்

மகரம்-உதவி

கும்பம்-தாமதம்

மீனம்-பணிவு