தமிழக செய்திகள்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 ஜூலை 2026: சர்வ ஏகாதசி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-9 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : ஏகாதசி நண்பகல் 1.55 வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : அனுஷம் காலை 7.29 வரை பிறகு கேட்டை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு

சர்வ ஏகாதசி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் பூம்பல்லக்கில் பவனி. மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம். கலிய நாயனார் குரு பூஜை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராஜாங்க சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம் ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - முயற்சி

ரிஷபம் - இன்பம்

மிதுனம் - புகழ்

கடகம் - செலவு

சிம்மம் - சுகம்

கன்னி - வெற்றி

துலாம் - உறுதி

விருச்சிகம் - சிறப்பு

தனுசு - தனம்

மகரம் - லாபம்

கும்பம் - சாந்தம்

மீனம் - அன்பு