தமிழக செய்திகள்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 ஜூலை 2026: குமார சஷ்டி

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, ஆடி-3 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : பஞ்சமி காலை 8.49 வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம் : உத்திரம் இரவு 11.25 வரை பிறகு அஸ்தம்

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

சஷ்டி விரதம். ஸ்கந்த பஞ்சமி, குமார சஷ்டி. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமானுக்கு ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கல்யாணம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம் - ஆர்வம்

ரிஷபம் - முயற்சி

மிதுனம் - பெருமை

கடகம் - இன்பம்

சிம்மம் - உற்சாகம்

கன்னி - உதவி

துலாம் - யோகம்

விருச்சிகம் - சாதனை

தனுசு - ஆக்கம்

மகரம் - பரிசு

கும்பம் - நன்மை

மீனம் - உண்மை