தமிழக செய்திகள்

Tamil News Live: சட்டசபையில் இன்றும் எதிரொலித்த சர்காரியா கமிஷன்... திமுக அமளி - 8 செப். 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாடு செய்திப்பிரிவு

பட்ஜெட் அனுமதி இல்லாமலேயே 14-1-2026 அரசாணை மூலம் 2026-27-ம் ஆண்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி எடுத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு

சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுக்கப்பட்டது குறித்த விசாரணை தேவை.

80 பணிகளுக்கு எதிர்கால பட்ஜெட்டில் முன்கூட்டியே ரூ.2,000 கோடி ஒதுக்கியது மிகப்பெரிய தவறு - அமைச்சர் ஆதவ்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்

கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி முறைகேடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்.

சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுத்துள்ளது திமுக.

தாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றெண்ணி எதிர்கால பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி முறைகேடு என குற்றச்சாட்டு

அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?

முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.

தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி - சபாநாயகர்

சபாநாயகர் உரை

திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?

சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம்.

அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.

பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்

சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்திருந்த திமுக எம்எல்ஏக்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர்.

சட்டசபை மாண்பை குலைக்கும் வகையில் செயல்படும் திமுக உறுப்பினர்களை அவை காவலர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

திமுக கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் - சபாநாயகர்

அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்து திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்தும், சூழ்ந்து நின்றும் திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி வருகின்றனர்.

அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு திமுக உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள்.

சட்டசபையை நடத்தவிடாமல் தடைசெய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர் - சபாநாயகர்

2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேறுங்கள் - அவை முன்னவர் செங்கோட்டையன்

சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளி

நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய எதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை - சபாநாயகர்

சட்டசபையில் திமுகவினர் என் அனுமதியின்றி போஸ்டர்களை காட்டினீர்கள்.

சர்காரியாக கமிஷன் செய்தி பற்றி பலமுறை மாமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.

மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி - சபாநாயகர்

சட்டசபையில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசியபோது ஒரு நிமிடம் கூட திமுகவினர் கவனிக்கவில்லை -சபாநாயகர் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியின் மீது சர்காரியா கமிஷனிடம் புகார் அளித்ததே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் தான் - அமைச்சர் ஆதவ்

அமைச்சர் ஆதவ் உரை

திமுக ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்தது என்று காட்டும் பொறுப்பு தவெக அரசுக்கு உள்ளது.

திமுக ஆட்சியில் நடந்தவற்றை ஒவ்வொரு துறையாக கிளீன் செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.

ஊழல் என்ற புற்றுநோயை திமுக உருவாக்கி உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார் முதலமைச்சர் விஜய்.

மறைந்தவர்கள் பற்றியும் அவையில் இல்லாதவர் பற்றியும் முதலமைச்சர் பேரவையில் பேசுவது நியாயமில்லை - கே.என்.நேரு

என்னை பேச விடமாட்டார்கள், தவெகவினர் பேசினாலே பயந்து எழுந்து நின்று கூச்சல் போடுவர் - அமைச்சர் ஆதவ்

எம்ஜிஆரும் அவையில் சர்காரியா கமிஷன் குறித்து பேசி உள்ளதால் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டாம் - செங்கோட்டையன்

ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது செய்யப்பட்டார்.

21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது - அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார் உரை

விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை.

கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியாக கமிஷனில் உள்ளது.

திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது.

முதலமைச்சர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் - எ.வ.வேலு

கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது.

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது - எ.வ.வேலு

நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது - எ.வ.வேலு

மிசா சட்டத்தை பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எதிர்ப்பு

பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார் - எ.வ.வேலு

நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.

அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.

ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின் - எ.வ.வேலு

சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு உரை

பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார்.

அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.

நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.

சட்டசபையில் இன்று பொதுத்துறை, அயலக தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஓய்வுக்கால நன்மைகளும், போக்குவரத்து ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது.

அமைச்சர்கள் செங்கோட்டையன், மரிய வில்சன், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார்கள்.

SCROLL FOR NEXT