தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - தமிழ்நாடு அரசு காவிரி விவகாரத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் - அமைச்சர் ஆனந்த் - 7 ஆகஸ்ட் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

மாலை மலர்

மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப்பகிர்வு கோரி தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வை உறுதி செய்ய வலியுறுத்தி நிதியமைச்சர் மரிய வில்சன் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அமைச்சர் வினோத்

அனைத்து விவசாயிகளையும் பயிர் காப்பீட்டிற்குள் கொண்டு வர முயற்சி.

பயிர் காப்பீடு கடந்தாண்டை வி நடப்பாண்டில் 44% கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே உள்ளது.

சூழலை கருத்தில்கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த சமரசமும் செய்யாது.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நிர்வாக, சட்டரீதியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் ஆனந்த்

காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா நீர் திறக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்

காவிரி விவகாரத்தில் உறுப்பினர்களின் கருத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் கேட்டு கொள்ளப்பட்டது.

கர்நாடக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் என கூறினார்.

காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி பேசுகையில்,

கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை.

காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான்.

பேச்சுவார்த்தை முயற்சியே தேவையில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாமகவும் வலியுறுத்துகிறது என்று கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்

திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் மனுக்களை 3 முறை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏன்?

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவைக்கு தவறான தகவலை அளித்துள்ளார் - அமைச்சர் ஆதவ்

இங்கேயே அனைத்துக்கட்சியினரும் உள்ள நிலையில் இங்கேயே தீர்மானம் நிறைவேற்றலாம் - அமைச்சர் ராஜ்மோகன்

சம்பந்தம் இல்லாத பிரச்சனையை பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டம்

அமைச்சர் நிர்மல்குமார் காவிரி பிரச்சனையை திசை திருப்ப முயல்கிறார் - உதயநிதி

முதலமைச்சர் 3 ஆண்டுகளாக யாருக்கும் பயந்தது இல்லை. எம்பிக்கள் கூட்டத்தில் திமுகவினர் பங்கேற்பார்களா? - அமைச்சர் நிர்மல்குமார்

காவிரி பிரச்சனை என்பது தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனை. காவிரி விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வது தான் தீர்வு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு சென்று தீர்வு எட்டப்படவில்லை - சிபிஐ ராமசந்திரன்

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - செல்லசுவாமி

முதலமைச்சருக்கு அவமானம் ஏற்பட்டால் அது தமிழ்நாட்டிற்கான அவமானம் - செல்லசுவாமி

காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் மண்டியிட தேவையில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தவெக கூட்டணியினரே கூறுகின்றனர்.

கர்நாடக அணையிலே போதிய நீர் இருந்தும் திறக்கப்படவில்லை - இபிஎஸ்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். மேகதாது அணை தொடர்பான திருத்தத்தை நாங்கள் ஏற்கவில்லை - இபிஎஸ்

முதலமைச்சர் விஜய்

காவிரி விவகார பேச்சுவார்த்தையில் அவமானம் ஏற்பட்டால் அதனையும் தமிழக மக்களுக்காக தாங்குவேன்.

காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் தருவார்.

அரசியலே நாங்கள் தான் எனக்கூறுவோருக்கு குறுவை தொகுப்பு தந்தது குறித்து தெரியாமல் போனது எப்படி?

தினசரி செய்தித்தாள் வாசித்திருந்தால் தெரிந்திருக்கும்.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக நாம் அனைவரும் சேர்ந்து தான் தீர்மானம் நிறைவேற்றினோம்.

காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது.

முதலமைச்சர் விஜய்

கர்நாடக பயணம் குறித்து யோசித்தது நான் தான், அதற்கு பல விமர்சன கருத்துகள் வந்தன.

நேர்மறையான விளைவு வரும் என்பதால் தான் பேசித் தீர்க்கும் முடிவு முயற்சி செய்தேன்.

பகை நாடுகளே பிரச்சனையை பேசி தீர்க்கப் பார்க்கிறோம். பக்கத்து மாநிலத்திடம் பேசி பார்க்க நினைத்தோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது - முதலமைச்சர் விஜய்

மேகதாது தொடர்பாக அனுமதி அளிக்க கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் - முதலமைச்சர்

காவிரி நமக்கு உயிர் ஆதாரம், அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை - முதலமைச்சர் விஜய்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.

முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிக்கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன் என அரசு பதில் அளிக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்.

தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது விவகாரத்தில் அதிக வேகம் காட்டும் கர்நாடகா.

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன என்று கூறினார்.

மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டசபை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்

* மறைந்த பின்னணி பாடகி ஜானகிக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.

* எழுத்தாளர் பூமணிக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

* தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்தது.

* தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் வரப்பெற்றதா? என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் இன்று தீர்மானம்

* மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணை

* சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

* விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும்.

80-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

* நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

* விமான நிலையம் வரும் வாகனங்கள் மற்றும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.