தமிழக செய்திகள்

Tamil News Live: ரூ.1200 கோடியில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - 3 செப். 2026

தொழில் வளமும், சுற்றுச்சூழலும் உறுதி செய்யப்படும் - அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாடு செய்திப்பிரிவு

உலகில் மக்கள் அதிகம் பேசும் முதல் 25 மொழிகளில் தமிழும் உள்ளது. ஒரு வாரத்திற்கு 2 மொழிகள் அழிகிறது.

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மொழிப்பாடம் என்ற வார்த்தையே இல்லை.

மொழிப்பாடம் என்று தான் இருக்கிறது, அதை சரி செய்ய வேண்டும் - சவுமியா அன்புமணி

பழமையாக நெல் ரகங்களில் பெயர், நாட்டு மாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு சட்டசபையில் சவுமியா அன்புமணி பேச்சு

ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாமக முழு மனதுடன் வரவேற்பு

ராஜஸ்தான், உ.பி., ம.பி. உயர்நீதிமன்றங்களில் இந்தி அலுவல் மொழி - சி.வி.சண்முகம்

மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை இன்று வரை மாற்ற முடியவில்லை. ஜென் Z இளைஞர்களுக்கு மெட்ராஸ் என்பதே தெரியாது.

தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயரை மாற்ற தனி தீர்மானம் தேவை. சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற வேண்டும் - சி.வி.சண்முகம்

முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக வரவேற்பு, அதிமுக ஆதரவு

முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு

என்னை பேச அழைக்காமல் தளவாய் சுந்தரத்தை அழைக்கலாமா?

என்னை விட தளவாய் சுந்தரம் அதிகம் பேசி விடுவாரா? - டென்ஷன் ஆன சி.வி.சண்முகம்

எதிர்க்கட்சி கொறடா எழுந்தவுடன் திமுகவினர் எழுந்து நிற்பதை ஏற்க முடியாது - சபாநாயகர்

ஆங்கிலத்திற்கு பிறகே தமிழ் என்று தான் திமுக ஆட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இது யாருடைய குழந்தையும் கிடையாது என ரகுபதிக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி

சட்ட சொற்களஞ்சியங்களை உருவாக்கினால் உச்சநீதிமன்றம் மறுக்காது.

ஐகோர்ட்டில் ஒரே மொழியாக தமிழை கொண்டு வர முடியாது. ஆங்கிலம் உடன் இருக்கத்தான் செய்யும் - ரகுபதி

இந்த தீர்மானம் எங்கள் குழந்தை, இதை வரவேற்கிறோம்.

மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதால் வரலாறு முக்கியம் - ரகுபதி

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை வேண்டும் என முதலில் கேட்டவர் ஸ்டாலின்.

2022-ல் பிரதமரிடம் நேரடியாக தைரியமாக குரல் எழுப்பியர் ஸ்டாலின்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என கேட்டார் ஸ்டாலின் - திமுக எம்எல்ஏ ரகுபதி

தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ ரகுபதி உரை

தமிழ் வழக்காடு மொழி என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.

சட்ட சொற்களஞ்சியம் இல்லாத காரணத்தால் 2006-ல் தீர்மானத்தை ஏற்க மறுப்பு.

நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம்.

மாநில மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்த சட்ட வாய்ப்புள்ளது - முதலமைச்சர் விஜய்

இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை.

குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.

தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்

மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது.

தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகளை தமிழில் வழங்க வேண்டும்.

வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும் - முதலமைச்சர் விஜய்

வருங்கால தலைமுறைக்கும் தமிழ் மொழியின் வளத்தையும் பெருமையையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை.

தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு உடனடி நடவடிக்கை - முதலமைச்சர் விஜய்

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை.

பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன் பேசப்படும் மொழி தமிழ் மொழி - முதலமைச்சர் விஜய்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி சட்டசபையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய்

ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்

தற்போது தலைமைச் செயலகம் 2 கட்டடங்களில் இயங்கி வருகிறது. 2 கட்டிடங்களில் 6000 பேர் பணியாற்றும் நிலை உள்ளது - முதலமைச்சர் விஜய்

மோட்டார் ஸ்போர்ட் சிட்டி உருவாக்கப்படும்.

இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை அறிந்து பயிற்சி அளிக்கப்படும் - முதலமைச்சர் விஜய்

தேசிய, உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்.

ஒலிம்பிக் நகரத்தில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்

சுற்றுச்சூழல் மாறு ஏற்படுத்தாத நிறைய நிறுவனங்கள் கொண்டு வருவோம் - அமைச்சர் ராஜீவ்

தொழில் வளமும், சுற்றுச்சூழலும் உறுதி செய்யப்படும் - அமைச்சர் கீர்த்தனா

பெங்களூருவில் இருந்து 1400 எம்எல்டி கழிவுநீர் தென்பெண்ணையில் திறக்கப்படுகிறது. கர்நாடக அரசிடம் பேசி தீர்வு காணப்படும் - அமைச்சர் ராஜீவ் உறுதி

தென்பெண்ணையாற்றில் கர்நாடக ஆலைக்கழிவுகள் கலப்பு - பாலகிருஷ்ணாரெட்டி

20% அளவுக்கு அனுமதி பெறாமல் மோர் மிளகாய் தயாரிக்கப்படுகிறது - அமைச்சர் ராஜீவ்

திண்டுக்கல்லில் முறையாக அனுமதி பெற்று மோர் மிளகாய் தயாரிப்பு. மோர் மிளகாய் தயாரிப்பால் நிலத்தடி நீர் பாதிப்பு என சில விவசாயிகள் புகார் - ஐ.பெரியசாமி

கடந்த ஆட்சியில் சுற்றுச்சூழல் துறையில் சரியான நடவடிக்கை இல்லை.

பவானி, ஈரோடு தொகுதிகளில் தான் எனக்கு அதிக சவால்கள்.

விதிகளை மீறி சாயக்கழிவுகளை வெறியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜீவ்

நிலக்கரியை சாலைகளில் கொண்டு செல்வதற்கு விதிகள் உள்ளன.

துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜீவ்

அதானி துறைமுகத்திற்கு நிலக்கரியை கொண்டு செல்லும்போது காற்றுமாசு உருவாகிறது - ஜவாஹிருல்லா

அரசு அதிகாரிகள், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜீவ் உறுதி

சாய ஆலைக்கழிவுகளை சுத்திகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். ரூ.11 ஆயிரம் கோடி செலவில் நடந்தாய் வாழி காவிரி திட்டம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டது - எடப்பாடி பழனிசாமி

நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை தவெக அரசு தொடருமா? - எடப்பாடி பழனிசாமி

வேதாரண்யத்திற்காகவும் வேதா ஜவுளி பூங்கா, வேதா நிலையத்தை நினைவில் வைத்தும் வேதா ஜவுளி பூங்கா என்று வைத்தீர்கள்.

இதில் 40 சதவீதம் மத்திய அரசு பங்கு, 9 சதவீதம் மாநில அரசு பங்கு.

தொழில் முதலீட்டாளர்கள் முழு மானியம் போட்டு தொழில் தொடங்க முடியாது என்று தெரிவித்தனர்.

உடனடியாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். அவர்களும் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.

நீங்களும் கூட்டணியில் உள்ளீர்கள். நீங்களும் முயற்சி செய்தால் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றி விடலாம் - அமைச்சர் விஜய் பாலாஜி

வேதாரண்யத்தில் வேதா ஜவுளி பூங்கா முழுமை பெறுமா? மாநில அரசின் நிதியில் வேதா ஜவுளி பூங்கா முடிக்கப்படுமா? - ஓ.எஸ்.மணியன்

தொழில் முதலீட்டாளர்கள் முன்வரும் பட்சத்தில் திருத்தணியில் புதிய ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை - அமைச்சர் விஜய் பாலாஜி

திருத்தணியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். எங்கள் தொகுதியில் எந்த தொழிற்சாலையும் இல்லை.

ஜவுளி பூங்கா அமைந்தால் 500 - 1000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர் - எம்எல்ஏ கோ அரி

அனைத்து பாலங்களின் பணிகளும் தொடர்வதாகவும் எந்த பணியும் நிறுத்தப்படவில்லை - அமைச்சர் ஆதவ்

திமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. பாலம் அமைக்கும் பணிகள் தவெக ஆட்சியில் தொடர்கிறதா? - எம்ஆர்கே பன்னீர்செல்வம்

குளித்தலையில் ரெயில்வே மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும் - எம்எல்ஏ சந்திரன் கோரிக்கை

செய்யாற்றின் குறுக்கே, விருகண்டா நதியின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

புவனகிரி தொகுதியில் புறச்சாலையில் மேம்பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் - எம்எல்ஏ அருள்மொழித்தேவன் வேண்டுகோள்

துரைப்பாக்கம் to நீலாங்கரை வரையிலான மேம்பாலப்பணிகள் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை - சரவணன்

மொடக்குறிச்சி: நால்ரோடு பகுதிகளில் பாலம் தேவை - சண்முகம்

அனைத்து கோரிக்கைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை - அமைச்சர் ஆதவ்

ரெயில்வே பாலங்கள் தேவை என பல எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் 42 இடங்களில் ரெயில்வே பாலம் கட்ட எம்எல்ஏக்கள் கோரிக்கை, அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

அனைத்து கோரிக்கைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ்

30 நொடிகளில் சுருக்கமாக பேசி முடிக்க வேண்டும் - சபாநாயகர்

சூலூரில் உயர்மட்ட பாலம் - ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி - கோவை இடையே பசுமை வழித்தடத்திற்கு DPR தயாரிப்பு - அமைச்சர் ஆதவ்

சூலூர் மையப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட அரசு முன்வருமா? - உறுப்பினர் கேள்வி

தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.