தமிழக செய்திகள்

Live Updates: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்: உச்சகட்ட பரபரப்பில் மதுரை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் மதுரை முழுவதும் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் மலையில் பாதுகாப்பு பணிக்கு சென்ற CRPF வீரர்களுக்கு மலர்தூவி வரவேற்பு

திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மலை மீதுள்ள தீபத்தூணை நோக்கி பூஜை பொருட்கள் புறப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் மதுரை வருகை.

தீபத்தூணைச் சுற்றி மூங்கிலால் ஆன மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று மாலை தீபமேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தீபமேற்றுவதற்காக இந்துக்களும், சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை செய்வதற்காக இஸ்லாமியர்களும் மலை மீது ஏறத் தொடங்கினர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவிட்ட நிலையில் மலை முழுவதும் பாதுகாப்பு பணியில் CRPF வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்திற்கு பாதுகாப்பிற்காக வந்த CRPF வீரர்களை வரவேற்ற பொதுமக்கள்.

SCROLL FOR NEXT