சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மானிய கோரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் சட்டசபைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வருகை
தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார்.
செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.
H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்த முதியவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை உள்ளதா? என்று உறுப்பினர் லட்சுமணன் எழுப்பிய கேள்விக்கு, H1N1 வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். H1N1 வைரஸ் குறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை நிலவுவதாக எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தென்காசியில் உள்ள இருளர், காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு சாதிச்சான்று கிடைக்க நடவடிக்கை தேவை. வீரகுடி வெள்ளாளர் சமுதாயத்தினருக்கு தென்காசியில் வைச பிள்ளை என்றுதான் சாதி சான்று தருகின்றனர் என எம்எல்ஏ ராஜா எழுப்பிய கேள்விக்கு, குறும்பர், நாயக்கர் மலைவாழ் நாயக்கர் என்று சாதி சான்றிதழ் தருவதில் சிக்கல் உள்ளது. சாதிச்சான்றிதழ் கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம், அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என எம்எல்ஏ சரவணன் கோரிக்கை விடுத்தார். சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்து ஆட்சியர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லை என அதிமுக எம்எல்ஏ அரி எழுப்பிய கேள்விக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. பயனாளிகளை கணக்கில் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார்.
என்னுடைய திருவெறும்பூர் தொகுதியில் மழைக்காலத்தில் நெல் வீணாவதை தடுக்க குடோன்கள் கட்டித் தரப்படுமா?- எம்எல்ஏ நாவல்பட்டு விஜி.
செப்டம்பரில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். தார்பாய் மூலமாக நெல்மணியை காய வைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். எந்த இடத்தில் பிரச்னை வந்தாலும், கோரிக்கை வந்தாலும் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்- அமைச்சர் வெங்கடரமணன்.
ராமநாதபுரம் பணங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எப்போது அமைக்கப்படும் என எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் எழுப்பிய கேள்விக்கு, 2026-27 கொள்முதல் பருவத்தில் நடக்கும் சாகுபடிக்கு ஏற்றவாறு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.
மொடக்குறிச்சியில் நீர்நிலை புறம்போக்கு எனக் கூறி 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா மறுக்கப்படுவதாக தவெக எம்.எல்.ஏ. சண்முகன் கூறியதற்கு, நீர் ஓடக் கூடிய இடமாக இல்லை என்றால் பரிசீலித்து நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்” என தவெக எம்.எல்.ஏ., ஈசிஆர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர்,“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 7 ஊராட்சிகள் செங்கல்பட்டிலும் 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இருப்பதால் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது” என்றார்.
கலசப்பாக்கம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படுமா? என்று உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் சாலை வசதி மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?- எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர்
ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது குறித்து குழு மூலம் ஆய்வு செய்து ஆட்சியர் மூலம் நடவடிக்கைகள் எடுப்போம்- அமைச்சர் வெங்கடரமணன்.
சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறுகையில்," செஞ்சி மருத்துவமனையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மகப்பேறுக்கான தனிக் கட்டடம் கட்டப்பட்டு ஆபரேஷன் தியேட்டர் நடைமுறைக்கு வராமல் இருந்தது அமைச்சர் ஆனந்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் வைத்தேன். மறுநொடியே DM-ஐ அழைத்து சொன்னதன் விளைவாக 10 நாட்களுக்கு முன்பாக ஆபரேஷன் தியேட்டர் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
சிசேரியன் மிக சிறப்பாக சிசேரியன் நடைபெற்றுள்ளது. நீர்வளத்துறை அமைச்சருக்கும்(ஆனந்த்) சுகாதாரத்துறை அமைச்சருக்கும்(அருண்ராஜ்) நன்றிக்கடனுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் உள்ளனர். கூடுதல் நியமனம் அவசியம். Liver Transplantation சிகிச்சை செய்யவும் அரசு முன்வர வேண்டும் என்று அதிமுகவின் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. முதல் முறையாக 284 உயர்சிறப்பு மருத்துவர் பணியிடம் உருவாக்கி இருக்கிறோம். Liver Transplantation தேவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுப்போம்" என்றார்.
நேபாள விவகாரம்.. எதிர்கட்சிகள் கோரிக்கை ஏற்பு
தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், அவர்கள் விளக்கும் முன்பாக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளிக்க, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அமைச்சருக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் எடுத்துரைக்க சபாநாயகர் வாய்ப்பளித்தார்.
தமிழ்நாடு சட்டசபை ஒருநாள் விடுமுறைபின் இன்று கூடியது. சபைகூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்க தொடங்கினார்.
அதற்கு நேபாளம் பெரு வெள்ளம் தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சர் விளக்கம் அளிப்பதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்:-
நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முன்னால் பேசினால் என்ன, பின்னால் பேசினால் என்ன?. நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் அமைச்சர் பதிலளிக்கிறார் என்பதல்ல.
அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் அமைச்சர் பதிலளிப்பது தான் முறையாக இருக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசிற்கு கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே அமைச்சர் பதிலளிப்பதா?. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் அதன் பின்னர் விளக்கம் அளியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பேசிய பின் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றார்.
மேலும், கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்- ஜே.சி.டி.பிரபாகர்.
இருப்பினும் சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்- ஜே.சி.டி.பிரபாகர்.
நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.
தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்- உதயநிதி
நேபாளம் சென்ற தமிழர்கள் 57 பேர் மாயம், அரசு தரிதமாக செயல்பட்டு அவர்களை தாயகம் மீட்டுவர நடவடிக்கை தேவை. நேபாளத்திற்கு கோவை ஈஷா மூலம் ஆன்மிக பயணம் சென்றோரின் நிலை என்ன?- இபிஎஸ்.
திருக்குறுங்குடி நம்பி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் பாதை, காலம் செல்ல செல்ல குறுகிக்கொண்டே செல்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதன் பாதையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?- எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன்
எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணணின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகளிடம் பரிசீலித்து ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்- வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்
நேபாள சம்பவம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்,"பேச்சின் இறுதியில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஐடியா ஒன்றை தந்தார்.
அவர்"காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால், எந்தந்த பகுதிகளில் காலநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் தெரிவித்தால், சுற்றுலா செல்பவர்களுக்கும், மீட்பு பணிகளுக்கும் வசதியாக இருக்கும்" என்றார்.
நேபாள நாட்டில் கைலாஷ் யாத்திரைக்கு தமிழகத்தை சேர்ந்த 103 பேர் பல குழுக்களாக சென்றுள்ளனர். நேபாள பெருவெள்ளம் ஏற்பட்ட ரஸ்வா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.
நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழகர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 34 பேரின் விவரங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்- சட்டசபையில் நேபாள வெள்ளம் தொடர்பான கவன ஈர்ப்புக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில்.
அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது- அமைச்சர் ராஜ்மோகன்.
துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.
கேள்வி நேரம் இருக்கும்போது துறையின் செயலாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அதனைக் குறிப்பு எடுக்க வேண்டும். துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும்- உதயநிதி
டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவும் நிலையில், கட்டுப்பாடு நடவடிக்கை என்ன என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது கொசு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் அனைத்து இயக்குநர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
ஏடிஎஸ் கொசுவால் டெங்கு பாதிப்பு ஏற்படுவதால் வீடுகளை சுற்றி கொசு உற்பத்தியாகாமல் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்ட்டில் கூடுதலாக 300 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது என்றாலும் நிலை கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்த நிறுவனம் ஆந்திராவிலும் முதலீடு செய்துள்ளது. சுஸ்லாண் நிறுவனம் ஆந்திராவுக்கு சென்றதாக செய்தி பரவும் நிலையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்.
மேலும் அவர்,"பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து சென்ற நிறுவனம் அரசின் நடவடிக்கையால் தற்போது ரூ.500 கோடியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சின்னபிள்ளை சுயஉதவி குழு மூலம் மதுரையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு என நான் பேசியது திருத்தி வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.
கீர்த்தனாவின் திருத்த அறிக்கை.. ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய திமுக..
விதியின் கீழ் திருத்த அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் கீர்த்தனாவுக்கு உரிமை இருக்கிறது. அதே விதியில், திருத்தக் குறிப்பை பேரவை கூடும் அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் தகவலுக்காக வைக்க வேண்டும். எனவே, இதை ஒழுங்குப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்- திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின்.
நிச்சயமாக, வருங்காலங்களில் திருத்த அறிக்கையை அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வர அமைச்சர்கள் முன்வர வேண்டும்- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்.
சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. இருப்பினும், நேரம் காரணமாக அறிவிப்பவர்களுக்கு, அவையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தைப் போக்கும் வகையில், இனி அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு அமைச்சர்கள் பேசும் நடைமுறை கொண்டுவரப்படும்- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.
அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். அது சரியா?- அமைச்சர் தங்கம் தென்னரசு.
என்னுடைய கருத்து, க்ளைமாக்ஸை மக்கள் பார்க்காமல் போய்விடுவார்களோ என்கிற கவலை- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தப் படம் ஓடாது, நன்றாக இருக்காது. எனவே, முன்பே க்ளைமாக்ஸ் போட்டுவிடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால், இந்த படம் ஓடாது, நன்றாக இருக்காது, எனவே முன்பே க்ளைமாக்ஸ் போட்டு விடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்கட்சி தலைவர் உதயநிதி.
இப்போதெல்லாம் படத்திற்கு இரு க்ளைமாக்ஸ் இருக்கிறது. படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் அவை வருகிறது. மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை- அமைச்சர் வன்னி அரசு.
சட்டமன்றத்தில் கேள்வி, விடை நேரம் நிறைவு பெற்று பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர்-சமூகநீதித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
சமூகநீதித்துறையில் புதிய அறிவிப்புகள்
ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான நல உதவிகளை வழங்க ஏதுவாக சமூக நீதி நல வாரியம் அமைக்கப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி, மருத்துவம், திருமண உதவி தொகை வழங்கி பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ திட்டம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாமாக்கருக்கு ரூ.160 கோடியில் 150 சமூகநீதி விடுதிகள் கட்டப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி விடுதி ஆண்டு பராமரிப்பு தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை.
தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும்.
ஆதி திராவிட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சமுதாய நிகழ்வுகளை நடத்த ஏதுவாக 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும்- வன்னி அரசு
மாணாக்கருக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றுமு் கல்விக்கு உகந்த தகுமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு 'அறிவொளி ஆசிரியர் விருது மற்றும் அறிவொளி காப்பாளர் விருது' வழங்கப்படும்.
இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கற்பித்தல் நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும்- வன்னி அரசு
ஊடகத் துறையில் இளம் திறமைகளை ஊக்குவிக்க உட்பயிற்சி உதவித்தொகை வழங்கும் “ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்” செயல்படுத்தப்படும் என பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் அமைச்சர் வன்னி அரசு.
இதன் மூலம் மாணாக்கர் ஊடக நிறுவனங்களில் நடைமுறை பயிற்சி பெற்று, தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொண்டு ஊடகத் துறையில் சிறந்து விளங்க பயிற்சி.
பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1400ல் இருந்து ரூ.1800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தி மாதாந்திர உணவு கட்டணம் வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் செயல்படும் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை சென்னை மாநகருக்கும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை நந்தனத்தில் ‘பழங்குடியினர் பண்பாட்டு மையம்' அமைக்கப்படும்- அமைச்சர் வன்னிஅரசு
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 'விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்' செயல்படுத்தப்படும்- அமைச்சர் வன்னிஅரசு
தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க ‘அகம் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டு, 2500 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு
சமூக நீதி விடுதிகளில் 20 கல்லூரி விடுதிகளுக்கு Inverter, fridge, Water Purifiers w 940 பள்ளி விடுதிகளுக்கு Inverter, Water Purifiers வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு
1,238 சமூகநீதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் உள்ள அனைத்து ஜன்னல்களுக்கும் ரூ.26.85 கோடியில் தரமான கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு
மலைப்பகுதிகளில் பழங்குடியின வாழ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வளம், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் வாழ்வியலை கண்டு மகிழும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பூம்பொழில் தங்கும் வசதிகள்' ஏற்படுத்தப்படும்.
உள்ளூர் பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு.
பழங்குடியின குழந்தைகளுக்கு மழலையர் கல்வி வழங்கவும், படித்த பழங்குடியின இளைஞர்களுக்கு வசிப்பிடத்திற்கு அருகே வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 250 இடங்களில் ‘சிறப்பு அங்கன்வாடி மையங்கள்' உருவாக்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு.
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு நிதியுதவி தொடர்பாக, சட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத்குமார் அறிவித்துள்ளார்.
அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு நவீன சிகைதிருத்தும் அழகு நிலையம் அமைக்க நிதியுதவி வழங்கப்படும்.
சலூன் கடை அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ.1.50 லட்சம் என 100 பேருக்கு ரூ.1.50 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
மதுரை, தேனி, திண்டுக்கல்லில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ரூ.4.50 கோடியில் உட்கட்டமைப்பு பணி மேற்கொள்ளப்படும்
ரூ.3 கோடியில் மிக பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் புதிதாக உருவாக்கப்படும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த 5,000 பேருக்கு இஸ்திரி பெட்டி வழங்கப்படும்.
தலித் மக்களில் 28 சதவீதம் பேர் குடிசைகளில் தான் உள்ளனர். 75 ஆண்டுகளில் தலித் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை.
அமைச்சர் ஆதவ் பேசியபோது திமுகவினர் எழுந்துநின்று கோஷம் எழுப்பிய நிலையில் நாங்களும் எழுந்து நிற்போம் என ஆதவ் பேசினார்.
மேலும் அவர், எத்தனை மாற்று சாதியினர் அர்ச்சகராக தற்போது வரை கோவில்களில் உள்ளனர் என தகவல் எடுத்து நான் கொடுக்கிறேன்.
திமுக அரசாணை போட்டது, விழா நடத்தியது ஆனால் 32 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. 5 ஆண்டு ஆட்சியில் இருந்தது திமுக, ஆனால் நீதிமன்றத்தில் வழக்கில் வெற்றிபெற முடியவில்லை. அந்த வழக்கை தொடுத்தது யார்?- அமைச்சர் ஆதவ்
கோவி செழியன்- இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டோருக்காக தீப்பிடித்து எரியாத கான்கிரீட் வீடு கட்டி தந்தது திமுக அரசு தான்.
5 ஆண்டுகளுக்கு தான் மக்கள் வாக்களித்துள்ளனர், 5 ஆண்டுக்கும் தவெக ஆட்சி இருக்கும் என சபாநாயகர் திட்டவட்டம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 32 பேருக்கு அர்ச்சகர் பணிநியமன ஆணை திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.
சில நல்ல மனம் படைத்தவரகள் நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தினால் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் சிக்கல்.
அர்ச்சகர் வழக்கில் தனி குழு அமைத்து உச்சநீதிமன்றத்தில சட்ட போராட்டம் நடத்தியது திமுக அரசு.
சிறுபான்மையினருக்கு 18 அறிவிப்புகளை கொடுத்து சரித்திரம் படைத்துள்ளது தவெக அரசு.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை செய்வது ஒவ்வொரு அரசின் கடமை. திமுக ஏன் இதுவரை ஒரு தலித்தை கூட பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கவில்லை?- அமைச்சர் ராஜ்மோகன்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கொடுத்தது தமிழக வெற்றிக் கழக அரசு. கடந்த தேர்தலில் 4 பேர் விசிக சார்பில் வெற்றி பெற்று வந்திருந்தோம், ஆனால் திமுக அரசு ஒரு அமைச்சர் பதவி கூட கொடுக்கவில்லை- வன்னி அரசு.
சமூக நீதி பேசக்கூடிய திமுக கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. மேற்குவங்க், பீகாரில் 3 மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி செயல்படுத்தினார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு கோப்பைகளை எங்கேயோ தூக்கிபோட்டுவிட்டது கடந்த திமுக அரசு.
தமிழக வெற்றிக் கழக அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
அண்ணன் சேகர்பாபு, பெரியார் பெயரை உச்சரிக்கவே கூடாது. கடந்த ஆட்சி பெரியார் பெயரை பெயரளவில் சொல்லிவிட்டு, அனைத்து ஜாதியினர் திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள். எல்லாம் பேப்பரில் தான் இருக்கிறது.
வாளோடு வரும் எதிர்க்கட்சியினரை ஆளும் கட்சி கேடயம் கொண்டு தடுக்க வேண்டுமே தவிர வாள் கொண்டு எதிர்க்கக் கூடாது.
இணக்கமான சுழ்நிலையை சுமுகமாக நடத்தவேண்டும் என்பது தான் அவையின் நோக்கம்: சபாநாயகர்
விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தவிர்த்து மற்ற விஷயங்கள் நடந்து வருகின்றன.
சட்டப்பேரவையில் கடந்த 3 நாளாக சண்டை மட்டுமே நடந்து வருகிறது.
சட்டமன்றத்தில் சண்டையைப் பார்க்க நாங்கள் வரவில்லை.
ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சியினர் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வதால் என்ன பயன்?
சட்டசபையில் நடைபெறும் சண்டையால் மக்களுக்கு என்ன பயன்? - பிரேமலதா
தமிழக சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை விதிகளை கருத்தில் கொண்டு விரைவில் விடுவிக்க வேண்டுகிறேன்
புளியங்குடி நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும்.
கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.
தென்மலையில் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து தரவேண்டும்.
பூலித்தேவன் மணிமண்டபத்தை பராமரிக்க வேண்டும்- திமுக எம்.எல்.ஏ. ராஜா
சென்னையின் பழமையான தொகுதி ராயபுரம் மற்றும் முக்கிய தொகுதிகளில் ஒன்று. நட்சத்திர தொகுதி என்றுக் கூறுவார்கள். ஆனால் அதன் நிலை சொல்வதற்கு இல்லை.
ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் அங்கு நிறைய இருக்கிறார்கள். அங்கு வீடுகள் இன்று வசிக்கும் 850 குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.
காசிமேடு மீன் சந்தையை புதிப்பித்துத் தர வேண்டுகிறேன். மீனவர்களுக்கு தற்போது தரப்படும் நிவாரணத் தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும்.
ராயபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப பூங்கா அமைக்கவேண்டும். இதன்மூலம் வடசென்னை இளைஞர்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
அதிக கொள்ளளவு கொண்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும் - ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு அரசுக்கு வைத்த கோரிக்கைகள்.
விலையில்லா விருந்தகத்தை பார்த்துதான் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தனர். அதுபோல தாய்மாமன் தங்க மோதிரத் திட்டமும் எப்போதிலிருந்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இப்போதுதான் திட்டமாக அறிவித்துள்ளோம். - சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு
தேர்தலுக்கு முன்னர் என்னைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் சிரிப்பார். ஆனால் முதல் மாநாட்டிற்கு பிறகு அவர் எனக்கு நிறைய இடைஞ்சல்களை கொடுத்தார். - விஜய் தாமு
அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி
ஈலுவாத்தியா சமூதாயத்தில் தமிழக முழுவதும் சுமார் 15 லட்சம்பேர் வசிக்கிறாரகள். இவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழ் கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த முறை ஜூலை 2020ல் நானும் சமூதாயத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து அன்னைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வசிக்கும் ஈலுவாத்தியா சமூதாய மக்களுக்கு பிசி சான்றிதழ் ஆவாணம் செய்யப்பட்டது.
வங்கி பணிகளில் பணிப்புரிய விரும்புவோருக்கு ஓபிசி சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அது இன்னும் நிலுவையில் உள்ளது.
இதன் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்
தமிழ்நாடு சட்டம் 45-ன் கீழ் 1994-ன்படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்கள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஒரு சமூகத்தை சேர்த்தல் அல்லது நீக்குதல் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணயைத்தின் பரிந்துரைகளை பெற்று அரசு பரிசீலனை செய்யப்படும் அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தாஹிராவுக்கு வாய்ப்பு... திமுக எதிர்ப்பு
திமுக கொறடா எ.வ.வேலு:
அலுவல் ஆய்வு குழு என்று உள்ளது, அதன் படி தான் அவை நடக்கிறது. அந்த பட்டியலில் இல்லாதவரை பேச அனுமதிப்பது எப்படி?
இதுக்கு எந்த முன் உதாரணமும் இல்லை. அனுபவம் உள்ள முன்னவர் செங்கோட்டையன், இது பற்றி சொல்ல வேண்டாமா?
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை ஏன் நம்பியிருக்க வேண்டும்? என்று சி.வி.சண்முகம் கேள்வி.
நம்மிடம் உள்ள பட்டியலை வைத்து மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ஜனார்த்தனன் கமிட்டி சொன்னதால் அதை பின்பற்றினோம் என்று எ.வ.வேலு கூறினார்.
இடம் மாறி அமர்ந்த முதல்வர்
சட்டப்பேரவையில் தனது இருக்கையிலிருந்து எழுந்துவந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நடுவே அமர்ந்த முதலமைச்சர் விஜய்.