சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள்.
கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.
உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.
தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?
3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன?
சட்டத்துறை, வனத்துறை அமைச்சர்கள் இதுதொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளனர் - சபாநாயகர்
3 தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும் - உதயநிதி
ஹீமோபிலியா மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எமிசிஜுமாப் மருந்தை விலையின்றி வழங்க வேண்டும் - எம்எல்ஏ ரவி
அத்தியாவசிய மருந்து பட்டியலில் சேர்க்கப்படாத நிலையிலும் எமிசிஜுமாப் மருந்தை வழங்க வேண்டும் - அமைச்சர் அருண்ராஜ்
பழனி ஆயக்குடி அரசு மாநில விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் - எம்எல்ஏ ரவி மனோகரன் கோரிக்கை
பழுதான கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை, 50 மாணவிகள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல் ஆயக்குடியில் ரூ.3.70 கோடியில் மாணவியர் விடுதி - அமைச்சர் வன்னி அரசு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசினர் தனித்தீர்மானம்
டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு
அரசின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு, கல்வியை பொதுப்பட்டியலை இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் - பாமக
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையிலான தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - ராமச்சந்திரன்
ஆசிரியர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் - எ.வ.வேலு உறுதி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு.
டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்.
மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? - திமுக எம்எல்ஏ கோவி செழியன்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் பலியாகி உள்ளார்.
மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் - திமுக எம்எல்ஏ சேகர்பாபு
மேட்டூர் நீர் திறப்பு எப்போது என கூறினார் தான் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய முடியும் - எடப்பாடி பழனிசாமி
காவிரி டெல்டா பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ளது - எம்எல்ஏ மாரிமுத்து
மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் - நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்
சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள்.
சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள். உறுப்பினர்களின் கேள்விகள் & கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள்.
சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி - திமுக உறுப்பினர் ஆஸ்டின்
சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்க கூடாது - எம்எல்ஏ ஆஸ்டின்
சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம், பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர் - அமைச்சர் நிர்மல்குமார்
திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர் என தளவாய் சுந்தரம் பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளி
எம்எல்ஏ ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்? - கேஎன். நேரு
விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன் - சபாநாயகர் விளக்கம்
எம்எல்ஏக்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள தொகுதிகளில் யார் மக்கள் பணி செய்வது? - எடப்பாடி பழனிசாமி
எம்எல்ஏ இல்லாமல் காலியாக உள்ள தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர் - அமைச்சர் செங்கோட்டையன்
பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? - இபிஎஸ்
காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? - அமைச்சர் செங்கோட்டையன்
எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது - எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் - சபாநாயகர்
ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? - ஆஸ்டின்
இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது - சபாநாயகர்
6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது - எம்எல்ஏ ஆஸ்டின்
மக்கள் பிரச்சனை கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - அமைச்சர் ஆதவ்
நாகர்கோவில் மிகவும் சிரமப்பட்டு இடம் தேர்வு செய்தோம். அடிக்கல் நாட்டி 6 மாதமாகியும் பணி தொடங்கப்படவில்லை. தொழில்துறை வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சியில் தொழில்துறை முதலிடத்தில் இருந்தது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் முந்தைய காலாண்டை விட 74.48% சரிவு, மற்ற மாநிலங்கள் 200% அதிகரித்துள்ளது - ஆஸ்டின்
தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாக ஆஸ்டின் பேசியது தவறான தகவல்.
100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.
காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை - அமைச்சர் கீர்த்தனா
காசு கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள் என கூறக்கூடாது - எ.வ.வேலு
அமைச்சர் கீர்த்தனா ஒரு சில பத்திரிகைகளை தான் கூறி உள்ளார் - அமைச்சர் நிர்மல்குமார்
தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மாநாட்டை முதலில் நடத்தியது ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி
நான் குறிப்பிட்ட பத்திரிகை ஒரு பத்திரிகை கூட கிடையாது. அது ஒரு வெப்சைட். பிரைவேட் வெப்சைட்.
அதே பத்திரிகையாளர்கள் தான் தினத்தந்தியில் நம்மை பற்றி, நம்முடைய தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்தார்கள்.
அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கே பேசி பெருமைப்பட்டு இருந்தால், தமிழ்நாடு முன்னேறுகிறது என்று பேசி இருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் - அமைச்சர் கீர்த்தனா
பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்துள்ளீர், முதலீட்டாளர்களை பாதிக்கும் - ஆஸ்டின்
பரந்தூர் ஏர்போர்ட்டா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார் - அமைச்சர் ஆதவ்
தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கிய காரணமான சிங்கிள் விண்டோ சிஸ்டம் தான். அதை முதல்வர் உருவாக்குவார் - அமைச்சர் ஆதவ்
60 நாட்களுக்குள் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை முதலமைச்சர் விஜய் உருவாக்கி காட்டுவார் - அமைச்சர் ஆதவ்
ஊழல் இல்லா ஆட்சியை முதல்வர் கொடுப்பதால் அனைத்து நிறுவனங்களும் முதலீடு செய்யும் தொழில்துறை வளரும். திமுக ஈர்த்ததைவிட 10 மடங்கு அதிக தொழில் முதலீடுகளை தவெக அரசு ஈர்க்கும் - அமைச்சர் ஆதவ்
90% நிலம் கையகப்படுத்தப்படவில்லை 48% நிலம் மட்டும் தான் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 1,202 ஏக்கர் நிலம் மட்டுமே கையப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்
கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகையை மக்களிடம் இருந்து திரும்ப பெற முடியாது, என்ன செய்வீர்கள்? - இபிஎஸ்
பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கூட வாங்கப்படவில்லை. பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கி குவித்தவர்கள், கறுப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே திட்டத்தை எதிர்க்கின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்
பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எதிர்ப்பு
பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? - எடப்பாடி பழனிசாமி
விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது - அமைச்சர் நிர்மல்குமார்
உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்
1000 ஆண்டு கால பொக்கிஷமான கம்பன் கால்வாய் பரந்தூர் பகுதிகளில் ஓடுகிறது- அமைச்சர் ராஜ்மோகன்
பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும்.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் தொழில்கள் தொடங்கப்படும்.
மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து - அமைச்சர் கீர்த்தனா
பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.
பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும்.
1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு
மக்கள் பாதிக்காதவாறு 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
நிலம் எடுப்பது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைத்த குழுவின் அறிக்கையை தற்போது வரை வெளியிடாதது ஏன்? - அமைச்சர் கீர்த்தனா
திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம் - அமைச்சர் வன்னி அரசு
பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் வன்னி அரசு
பரந்தூர் விமான நிலையத்துக்காக கையப்படுத்தப்பட்ட நிலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படுமா?
மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? - காங்கிரஸ்
அரசியல் நடந்தால் தமிழ்நாட்டிற்கு எந்த நல்ல திட்டமும் வராது.
எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் நிலையில் இப்படியே போனால் ஒரு டிரில்லியனும் வராது, ஒன்றரை டிரில்லியனும் வராது - சிவி. சண்முகம்
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.
திமுக கொண்டுவந்த பரந்தூர விமான நிலைய திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது - சிவி. சண்முகம்
தவெக எம்எல்ஏ முஸ்தபா பேச்சிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
உருட்டல் மிரட்டல்களுக்கு தவெக எப்போதும் பயப்படாது. சபாநாயகருக்கான கண்ணியத்தை மதியுங்கள் - அமைச்சர் ராஜ்மோகன்
சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று பூண்டி கலைவாணன் வாக்குவாதம்
தவெக எம்எல்ஏ கூறிய ஒரு கருத்துக்கு ஆட்சேபம் தான் தெரிவித்தோம் - கோவி செழியன்
பேசியதற்கு ஆதாரத்தை கொடுத்தார் தவெக எம்எல்ஏ முஸ்தபா
எம்எல்ஏக்கள் பேச்சு பேரவைக்கு வெளியே சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது - தமிமுன் அன்சாரி
சட்டசபை மாண்பு கருதி முஸ்தபா காட்டிய ஆதாரத்தை வெளியிட விரும்பவில்லை - சபாநாயகர்
மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு முதலமைச்சர் விஜய் வர வேண்டும் - முஸ்தபா
மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்.
மதுரையில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் - முஸ்தபா கோரிக்கை
வடமாநிலங்களில் கட்டமைப்பு மேற்கொள்ள சிஎஸ்ஆர் நிதியை என்எல்சி பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தடுப்பணைகள் கட்ட எல்எல்சியின் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்த வேண்டும் - சவுமியா அன்புமணி
பரந்தூர் மக்களைப்போல் என்எல்சியால் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாப்போம் - அமைச்சர் கீர்த்தனா
மத்திய பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் என்எல்சி பிரச்சனைகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துக்கூற வேண்டும் - அமைச்சர் கீர்த்தனா
கன்னியாகுமரி மாவட்ட வாழை, பலா, மிளகிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - தாரகை கத்பட்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் - தாரகை கத்பட்
இந்தியாவிலேயே நம்பர் ஒன் ரப்பர் என்றால் அது கன்னியாகுமரி ரப்பர்தான் - தளவாய் சுந்தரம்
கனிம வளத்துரையாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் மாநில அரசின் வருவாய் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு த.வெ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?- பரமக்குடி எம்.எல்.ஏ.
வணடல் மண் எடுக்கும் நடவடிக்கையை எளிமையாக்க வேண்டும். மூன்று துறை நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டும்- பரமக்குடி எம்.எல்.ஏ.
பரமக்குடியில் ஒலிம்பிக் மைதானம் உருவாக உள்ளது- பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
நாங்கள் தற்குறி கூட்டம் அல்ல, வெற்றிக் கூட்டம்., இன்னும் இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. அது TVKவுக்கும் TVK-வுக்கும் இடையில்தான் போட்டி கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா
இல்லை இல்லை இல்லை என்றுதான் எனது தொகுதி உள்ளது- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா
அமராவதி ஆற்றில் ஆழ்துறை கிணறு அமைத்தால் தண்ணீர் தட்டுப்பாடு வராது- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா
எனது தொகுதியில் சிட்கோ ஒன்று அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன்- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா
கரூரில் விமான நிலையம் கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன்- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா
1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை கொண்டு வர செயற்கை நுண்ணறிவு முக்கிய காரணியாக இருக்கும்: ஏ.ஐ. அமைச்சர் குமார்
சென்னையை நோக்கி வரும் ஏராளமான இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்பு பூமி வேளச்சேரி- ஏ.ஐ. அமைச்சர் குமார்
குடிநீர், மின்சாரம், சாலை என எந்த பிரச்சினையாக இருந்தாலும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல சிரமம் தேவையில்லை. தமிழ், ஆங்கிலம் படிக்க, எழுத முடியாமல் இருந்தாலும் சரி. வாய்ஸ் இருந்தால் போதும். ஏ.ஐ. புகாரை அறிந்து தானாகவே துறைக்கு கொண்டு சென்றுவிடும்- ஏ.ஐ. அமைச்சர் குமார்
அரசு கேபிள் டி.வி. மற்றும் நிர்வாகம் தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
செயற்கை நுண்ணறிவு மூலம் முதலமைச்சர் DashBoard 2.0 உருவாக்கப்படும்
புத்தாக்க வாய்ப்பு மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும்- ஏ.ஐ. அமைச்சர் குமார்.
கடைசியில் இருக்கும் கிராமம் வரை டிஜிட்டல்
300 புதிய ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படும்
ஐஐடி உடன் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி
தரவு தள கட்டமைப்புகள் அமைக்கப்படும்
வெற்றித் தமிழ் இணையதளம்
ஏ.ஐ. ஆலோசனைக்குழு அமைத்தல்- ஏ.ஐ. அமைச்சர் குமார்
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலுரை
* குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மக்களுக்கு நன்றி
* 104 நிறுவனங்களுடன் MOU ஏற்பட்டுள்ளது.
* 25 புதிய நிறுவனங்கள் வந்துள்ளன.
* தற்போதுள்ள ஒப்பந்தங்கள் எல்லாம் டிரைலர்தான்.
* முதலீட்டார்கள் வருவதற்கு காரணம் லஞ்சம் இல்லை என்பதுதான்.
* அந்நிய முதலீடு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
* வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
* ஜவுளித்துறையில் 16 திட்டங்கள்
* 58 சிப்காட் பூங்காவில் 8-ல் தண்ணீர் வசதி இல்லை.
* ஓசூரில் விமான நிலையம் அமைக்க முயற்சி.
* கங்கை கொண்டான் சிப்காட்டில் 2500 பேர் தங்கும் வகையில் தங்குமிடம்
* கங்கை கொண்டான் சிப்காட்டில் 2500 பேர் தங்கும் வகையில் தங்குமிடம்
* மனைகள் தொடர்பாக டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்
* விபத்துகளை தடுக்க டிஜிட்டல் கண்காணிப்பு
* செமிகண்டக்டர் துறையில் ஊக்கத்தொகை திட்டம்
* வெற்றி மகளிர் மேம்பாட்டுத் திட்டம்
* உப்பள தொழிலாளர்களின் மழைக்கால நிவாரணம் 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
கனிம வளத்துறை அமைச்சர் TK பிரபு பதிலுரை
* காணாமல் போன மலைகள். பட்டியலிட்ட அமைச்சர்
* 320 கோடி ஆண்டுகளுக்கு முன்னதான குன்றுகள், மலைகள் காணாமல் போகின.
* கழிவு கற்களை மறுசுழற்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்.
* 198 சட்டவிரோத குவாரிகளில் கண்டறியப்பட்ட FIR போடப்பட்டுள்ளது.
* ஆளில்லா விமானம், செயற்கைக்கோள் மூலம் கனிம சுரங்கம் கண்காணிப்பு
* ஆளில்லா விமானம், செயற்கைக்கோள் மூலம் கனிம சுரங்கம் கண்காணிப்பு
* குறைதீர்க்கும் மையம் அமைக்கப்படும்.
முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை: அமைச்சர் கீர்த்தனா அறிவித்த முக்கிய அறிவிப்புகள்
* உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு மழைக்கால வரும் நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் கொண்ட ஆண்டொன்றுக்கு 5,000 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் "வெற்றி நோட்டு புத்தகங்கள்" தயாரிக்கும் தொழில் அலகு ஒன்று கரூர் மாவட்டம், மாயனூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
இயற்கை வளங்கள் துறை: சட்டசபையில் புதிய அறிவுப்புகளை வெளியிட்டார் அமைச்சர் டி.கே. பிரபு
* சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும்.
* புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்படும்.