தமிழக செய்திகள்

Tamil News Live: ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் விஜய் - 24 ஆகஸ்ட் 2026

2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது.

Maalaimalar

சட்டசபையில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனா உரை

பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணியில் அதிக நிதிக் கசிவு.

நிதிக் கசிவு தொடர்பாக 30 நாட்களாக தகவல்களை திரட்டி வருகிறோம்.

பல திட்டங்கள், மேம்பாலங்கள், பூங்காக்கள் உருவாக்கியது அதிமுக ஆட்சியில் தான் - எடப்பாடி பழனிசாமி உரை

கோவைக்கான சிப்காட் திட்டத்தை திமுக கைவிட்டு விட்டது.

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் - எஸ்.பி.வேலுமணி

மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு சட்டசபையில் உரையை தொடங்கினார் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்தது அதிமுக.

கோவை மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமான திட்டம்.

அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக.

அதிமுக ஆட்சியில் கட்டிய பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயரை வைத்தது திமுக.

திமுக ஆட்சியில் கோவைக்கு எதுவும் செய்யவில்லை.

வியாழக்கிழமையில் இருந்து கேள்வி நேரம் உண்டு - சபாநாயகர் அறிவிப்பு

பேச அனுமதி கேட்டபோது பல முறை முகத்தை கூட திருப்ப மாட்டார், தற்போதைய சபாநாயகர் போல் கூடுதல் வாய்ப்பு தரமாட்டார் - எஸ்.பி.வேலுமணி

கடந்த முறை எதிர்க்கட்சியான அதிமுக கொறடாவாக இருந்தபோது அவரும் பேசினார், மற்றவருக்கும் அனுமதி பெற்று தந்தார் - கே.என்.நேரு

மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எஸ்.பி.வேலுமணி உரை

கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு

கன்னி பேச்சு என்பதை அறிமுக உரை என்று மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அமைச்சர் ராஜ்மோகன் வேண்டுகோள்

எம்எல்ஏக்கள் முதன்முறையாக சட்டசபையில் பேசுவதை கன்னிப்பேச்சு எனக்குறிப்பிட வேண்டாம் - சவுமியா வேண்டுகோள்

கன்னிப்பேச்சு என்ற வார்த்தைக்கு பதிலாக அறிமுக உரை என்ற வார்த்தை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என சவுமியா கோரிக்கை

கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு என தனி பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் - எம்எல்ஏ சிந்து

மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் குடியாத்தம் தவெக எம்எல்ஏ சிந்து உரை

என் வெற்றிக்கு பின்னால் இருப்பது என் கணவர்.

சீரியலில் மூழ்கி இருந்த குடும்பங்களை சட்டசபையை பார்க்க வைத்தவர் முதலமைச்சர்.

நியமன தேர்வுகள் இன்றி சீனியாரிட்டி, தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் மீண்டும் நன்னடத்தை வகுப்புகளை தொடங்க வேண்டும், பள்ளிகளில் RO குடிநீர் வழங்க வேண்டும்.

தண்ணீர் பிரச்சனை என்பது இயற்கையாக வருவது தான் - எ.வ.வேலு

தொகுதி மக்களின் கருத்தைதான் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் கூறினார் - அமைச்சர் ராஜ்மோகன்

58-ம் கால்வாய்க்கு திமுக ஆட்சியில் தண்ணீர் கொண்டுவரவில்லை - உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய்

மதுரை மாவட்டத்தில் செழிப்பாக இருக்கும் தொகுதிகள் சோழவந்தான், உசிலம்பட்டி - திமுக

கன்னிப்பேச்சாக இருக்கலாம்... ஆனால் குற்றம்சாட்டிக்கொண்டே இருந்தால் எப்படி? - எ.வ.வேலு

தவெக ஆட்சிக்கு வரவில்லை என்றால் உசிலம்பட்டி காணாமல் போய் இருக்கும் - தவெக எம்எல்ஏ விஜய்

மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் - தவெக எம்எல்ஏ விஜய் உரையாற்றினார்

நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு மேம்படுத்த மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி தந்தது.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிகிறது - கே.என்.நேரு

எங்களுடன் இருந்த அதிகாரிகள் தான் முழுமையாக இன்றும் நகராட்சி துறையில் பணியாற்றுகின்றனர் - கே.என்.நேரு

தொடர முடியாத நிலையில் உள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.

சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. 540 இடங்களிலும் குழாய்கள் அமைத்து சாலைகளை தோண்டி பணி செய்ய வேண்டும் - கே.என்.நேரு

பாமக சட்டமன்ற குழு தலைவர் சவுமியா அன்புமணி எழுப்பிய கேள்விக்கு கே.என்.நேரு விளக்கம்

கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கே.என்.நேரு உரை

தேர்தல் வந்ததால் இறுதி அறிக்கையை அவையில் வைக்க முடியவில்லை.

தற்போதைய அரசு திருப்புகழ் கமிட்டி அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கலாம்.

உள்ளாட்சித்துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளொன்றுக்கு 5,000 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுத்தோம்.

கோப்புகளை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுத்தவர் கலைஞர் - கே.என்.நேரு

வெள்ளத்தடுப்பு குறித்த திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து கே.என்.நேரு விளக்கம்

உள்ளாட்சி துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின் - கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு உரை

24 மணி நேரத்திற்கு முன்பாகவே புத்தகங்களை கொடுக்க வேண்டும் - சபாநாயகர் உத்தரவு

நேற்று இரவு 8 மணிக்கு தான் கொள்கை விளக்க புத்தகம் கிடைத்தது - இபிஎஸ்

மானியக்கோரிக்கை புத்தகங்கள் ஒருநாளுக்கு முன்பாகவே கிடைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் விஸ்வநாதன் பதில் உரை

பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் ராஜ்மோகன் பதில் உரை

சட்டசபையில் வனவிலங்குகள் தாக்குதல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

எதிர்ப்பு குரல் கொடுப்பதாக இருந்தால் வெளியே சென்று குரல் கொடுங்கள் என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு

பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக பேரவையில் எழுந்து நின்று முழக்கமிட்ட திமுகவினரை கண்டித்த சபாநாயகர்

பரந்தூர் விமான நிலையம் குறித்து பேச அனுமதிக்க கோரி திமுக எம்எல்ஏக்கள் அமளி

திமுக எம்எல்ஏ மீதான அமைச்சரின் புகாருக்க திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று சட்டசபையில் எதிர்ப்பு.

பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக சட்டசபை உறுப்பினர் முதலமைச்சர், அமைச்சர்களை மரியாதை இன்றி பேசி இருக்கிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது என்று பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.

திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்

மகளிருக்கான பேருந்து பயணத்திற்கு வருமான உச்சவரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை - முதலமைச்சர் விஜய்

மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் அக்டோபர் 2-ந்தேதி தொடக்கம்.

டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்

புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.

சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைச்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் - முதலமைச்சர் விஜய்

3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் - முதலமைச்சர் விஜய்

ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கும்.

அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்திற்க ஆண்டுதோறும் தோராயமாக ரூ.4000 ஒதுக்கப்படும் - முதலமைச்சர் விஜய்

அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்

பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களை முன்னேற்றும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.

சட்டசபையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது.

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை கூட்டம் கூடியதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.