கடந்த திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறைக்கு புதிதாக தேர்வு.
திமுக ஆட்சியில் போதுமான மின்மாற்றிகள் வாங்கப்படவில்லை.
மின்துறை அதிகாரிகளின் செல்போன் எண்கள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அதிகம் மின்கட்டணம் வந்த நுகர்வோரை மின்வாரியம் தானாக மறுமதிப்பீடு - அமைச்சர் நிர்மல்குமார்
செந்தில்பாலாஜி குறித்த வார்த்தையை திரும்ப பெறுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தகவல்
ஒரு அமைச்சர் சிறைக்கு சென்ற பிறகு தங்கம் தென்னரசு மின்சாரத்துறை அமைச்சராகிறார் - நிர்மல்குமார்
பாத்ரூமில் யார் யார் எவ்வளவு நேரம் என கணக்கெடுக்க ஒரு அமைச்சரா? - உதயநிதி
திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நிற்பது போல் நாங்கள் எழுந்தால் அவை நடைபெறாது - ஆதவ்
கரூர் கம்பெனி ஓனர் சாரி சாரி கரூர் முன்னாள் எம்எல்ஏ - அமைச்சர் நிர்மல்குமார் பேச்சார் திமுக அமளி
2719 நுகர்வோருக்கும் குளறுபடி ஏற்பட டேபிள் ரீடிங் தான் காரணம்- அமைச்சர் நிர்மல்குமார்
3.70 லட்சம் மறுமதிப்பீடு என்பது புகாரின் அடிப்படையில் செய்யப்பட்டது அல்ல - அமைச்சர் நிர்மல்குமார்
எண்களை மாற்றாமல் ஏர் டெல்லில் இருந்து ஜியோவிற்கு மாறவில்லை?
மின்துறையும் அமைச்சரும் ஒன்றாக இணைந்து மின்கட்டண கணக்கீட்டில் குளறுபடி குறித்து தீர்வு காண வேண்டும்.
தவெக ஆட்சியில் மின்துறையில் பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது - செந்தில்பாலாஜி
திமுக ஆட்சியில் கரூருக்கு 5 வருடங்களில் ரூ.5,000 கோடியில் திட்டங்கள்.
மின்கட்டண கணக்கீட்டில் குளறுபடி - மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக லட்சக்கணக்கானோர் புகார்.
மின்துறையில் முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன. மின் விநியோக இயக்குநர் பணியிடமே காலியாக உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர் ஆதவ் எழுந்து பேசுகிறார்.
அமைச்சர் பதவிக்கு இணையான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குரிய மரியாதை தர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது 4 முறை அமர வைக்கப்பட்டார். இது எந்த வகையில் நியாயம்? - ஓ.பன்னீர்செல்வம்
பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு மரியாதை தேவை என சபாநாயகரிடம் திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
கோப்பு திறப்பதில் முதல்வருக்கு எந்த தயக்கமும் இல்லை. எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றுவார் - அமைச்சர் ராஜ்மோகன்
சட்டசபை நிகழ்வுகளில் நீக்கப்பட்ட காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் நடவடிக்கை - சபாநாயகர்
ஆளுங்கட்சிக்கு சாதகமானவை மட்டுமின்றி முழுமையாக நேரலையாக தவெக அரசு தான் கொடுக்கிறது - அமைச்சர் ராஜ்மோகன்
சட்டசபை கேள்வி நேரத்தை முதன்முறையாக நேரலை செய்தது திமுக ஆட்சி தான் - உதயநிதி
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்யும் அனைத்தையும் கேமராமேன்கள் காட்ட வேண்டும் என சபாநாயரிடம் அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை
உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் திமுக பயப்படாது, ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் - உதயநிதி
முதல்வருக்கு ஓபன் சேலஞ்சாக சொல்கிறேன், கோப்புகளை திறந்து பார்க்கட்டும், ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.
சட்டசபையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது போல் பேசக்கூடாது - உதயநிதி
நாங்கள் கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தான் ஆளுங்கட்சியினர் பதில் அளிக்கின்றனர்.
ஜோசியக்காரன் என்பது தவறான வார்த்தையல்ல, ஜோசியக்காரணை அரசு பணியில் நியமித்து நீக்கியது தவெக அரசு.
அவை குறிப்பில் இருந்து நீங்கள் நீக்கியவை எல்லாம் நேரலையில் டிவியில் ஒளிபரப்பப்பட்டு, ரீல்ஸ் ஆக பரவுகிறது - உதயநிதி
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதை எல்லாம் தமிழ்நாடு பார்த்துவிட்டது - அமைச்சர் நிர்மல்குமார்
யாரையும் கன்சல்ட் செய்யாமல் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கிறார் முதலமைச்சர் என்பதை மக்கள் அறிவர்.
கருத்து கூறும்போது அதனை ஒட்டி பாடல் பாடுவதில் எந்த தவறும் இல்லை, சூப்பர் சிங்கர் வார்த்தை அவசியம் இல்லை - சபாநாயகர்
நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை, நாங்கள் சட்டசபை நேரலையை பார்க்கிறோம் என 70 வயது முதியவர் சொன்னார் - அமைச்சர் ஆனந்த்
பெரும்பான்மை கட்சியாக தன்னை நிரூபித்த தவெகவுக்கு எந்த பயமும் இல்லை. சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யும் தைரியம் திமுகவுக்கு இல்லை - அமைச்சர் ஆதவ்
நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையினர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
நேர்மையான வெளிப்படைத்தன்மையான சட்டமன்றத்தை நடத்தக்கூடிய தைரியம் திமுகவுக்கு இல்லை.
2021 தேர்தல் அறிக்கைப்படி சட்டசபை நிகழ்வை நேரலை செய்யாதது ஏன்?
ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆதாரமின்றி குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளோமா என்று சிந்திக்கும் வகையில் பேரவை நடக்கிறது.
முதலமைச்சர் முன் வைக்கப்பட்டுள்ள கோப்புகளை ஜோசியக்காரன் சொன்னால் தான் திறப்பாரா?
முதல்வர் முன் உள்ள ஊழல் தொடர்பான கோப்புகளை திறக்கலாம், உடனடி நடவடிக்கை எடுக்கட்டும்.
பர்வதமலைக்கு செல்வதற்கான தடைகளை நீக்க வேண்டும் என அதிமுக சார்பில் சட்டசபையில் கோரிக்கை
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பூசாரி காவலர்கள் தாக்கியதால் உயிரிழப்பு குறித்து திமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம்.
புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்தில் அடிப்படி வசதி தேவை, துறையூரில் உள்ள ஏரியை பராமரிக்க நடவடிக்கை தேவை.
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள துறையூர் சின்ன ஏரியை பராமரிக்க நடவடிக்கை தேவை.
காவல்நிலையம், மருத்துவமனை, பெண்கள் உடைமாற்றும் இடம் இல்லை - பேரவை துணைத்தலைவர் ரவிசங்கர்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாளில் சிலை அலங்கரிக்கப்பட்டு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது.
லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை முறையாக தான் பராமரிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் விஸ்வநாதன்
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா மாளிகை வளாகத்தில் உள்ள சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை. பிறந்தநாள் அன்று மட்டுமே மாலை போடப்படுகிறது. ஜெயலலிதா சிலையை தினமும் பராமரித்து மாலை அணிவிக்க வேண்டும், செலவை கூட நாங்கள் ஏற்க தயார்.
ஜெயலலிதா பலகலைக்கழகத்தை மீண்டும் தொடங்க வேண்டும். கல்வியில் பின்தங்கிய மாவட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது - சி.வி. சண்முகம்
தவறு செய்வது எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்போம்.
மணலி, எண்ணூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை, சரி செய்யும் பணி நடக்கிறது.
மனித கழிவு கலந்தால் தான் நீரில் ஆக்சிஜன் தன்மை குறையும், ஆலை கழிவு தற்போது வரை கலக்கவில்லை என தகவல் - அமைச்சர் ராஜீவ்
ரசாயனம் கலக்கவில்லை என அமைச்சர் சொல்கிறார் ஆனால் ரசாயனம் கலந்தால் தான் நீர் தரம் மாறும், அதனை மறுபரிசீலனை செய்க - பாமக
ஆற்றில் மீன்கள் செத்து கிடந்தது தொடர்பாக 5 இடங்களில் ஆய்வு நடத்தினோம்.
ஆய்வு செய்ததில் 2 இடங்களில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது கண்டறியப்பட்டது.
இறந்த மீன்களும் ஆய்வுக்காக மீனவளத்துறைக்கு அனுப்பு வைப்பு, ஆய்வு முடிவுக்கு பின் நடவடிக்கை.
முகத்துவார பகுதியில் எந்த ரசாயனமும் இல்லை. கழிவு நீர் கலப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை.
மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாக ஆய்வு செய்து உண்மை கண்டறிவதற்கு 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் பல நிறுவனத்தின் கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன.
விசாரணை ஆணையம் அமைத்து சுற்றுச்சூழலை பாதிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை தேவை - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்
மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை தேவை.
எண்ணூர் கழிமுகத்தில் கொத்து கொத்தாக மீன்கள் இறப்பு.
முகத்துவாரத்தில் ரசாயனம் கலப்பால் மீன்கள் இறப்பு - எடப்படி பழனிசாமி
எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் - எடப்படி பழனிசாமி
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிமுகம் தொடர்பாக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை) ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள்.
நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதலமைச்சர் விஜய்யிடம் உள்ளது. அவர் அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் யாரேனும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.