ஆந்திரா - தமிழக மீனவர்கள் மோதல் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சட்டசபையில் விளக்கம்
ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை.
திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு. தவெக ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு.
தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கம் வழங்க நடவடிக்கை.
வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் - அமைச்சர் வன்னி அரசு
மாணவனுக்கு நிதி கொடுத்தது திமுக ஆட்சியில் என்பது ஒத்துக்கொள்கிறேன்.
கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன்.
தான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்வு.
500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் திமுக வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்வு.
மற்ற மாணவர்களுக்கு வந்து விட்டது, தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.
திமுக ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார், குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை - கோவி செழியன்
இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நாண்டு உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்பிக்காமல் மாணவர் குற்றச்சாட்டு.
தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் ரூ.135 கோடி வழங்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை - அமைச்சர் வன்னி அரசு
10 மாதங்கள் ஆகியும் மாணவர் தனது ஆவணங்களை பதிவு செய்யவில்லை.
அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு வன்னி அரசு பதில்
அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு.
மலேசியாவில் பயின்று வரும் மாணவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு பதில்
ஒழுங்கு அமைதி பராமரிப்பது குறித்து உயர்கல்வித்துறை மூலம் கல்லூரி கல்வி இயக்கத்திற்கு சுற்றறிக்கை.
அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தவறுதலாக குறிப்பிடப்பட்ட வார்த்தை அறிந்ததும் வாபஸ்.
மாணவர்களின் நியாயமாக போராடும் உரிமைகளை காக்கும் அரசாக தவெக அரசு செயல்படும் - அமைச்சர் விஸ்வநாதன்
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கண்காணிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
சுற்றறிக்கையில் தவறுதலாக சில வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.
மாணவர்களின் உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசிற்கு இல்லை.
குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியரை சர்வே செய்வதற்காக அனுப்பப்பட்டவர். வட்டாட்சியர் தேவையில்லாமல் கடிதம் எழுதி உள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன்
இடதுசாரி அமைப்புகளுடன் செயல்பட்டு போராடுவோர் தொடர்பாக கணக்கெடுப்பு எடுக்க சொல்லி உள்ளனர் - மாரிமுத்து
மாணவர்கள் போராடுவதை கண்காணிக்க கடிதம் அனுப்பப்பட்டது தொடர்பாகவும் கவன ஈர்ப்பு தீர்மானம்
உயர்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை தொடர்பாக கம்யூ. எம்எல்ஏ மாரிமுத்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.
அண்ணா பல்கலை. உள்ளிட்ட 9 கல்லூரிகளுக்கு டீன் இல்லை, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம்
சவுதி அரேபியாவில் 10-ந்தேதி ஈரானிய கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் தமிழக மீனவர் பலி.
புலன் விசாரணை நடைபெறுவதால் தான் உயிரிழந்த மீனவர் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம்.
மீனவர் உடலை தாயகம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சவுதி தாக்குதலில் ஒரு மீனவர் பலி, 3 பேர் படுகாயம், இலங்கை கடற்படையும் மீனவர் மீது தாக்குதல்.
மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் - சிபிஐ ராமச்சந்திரன்
மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் ஈரான் துப்பாக்கிச்சூட்டில் பலி, அரசு நடவடிக்கை எடுத்து மானியம் தர வேண்டும் - சிவக்குமார்
சிறப்பு கவன ஈர்ப்பு தந்தாலும் அமைச்சர் தரப்பில் பதில் வந்தால் தான் விவாதம்.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பதிவு செய்ய மட்டும் அனுமதி தருகிறேன், பதில் வந்த பின் விவாதம் நடத்தலாம் - சபாநாயகர்
அவசரம் என்பதால் தான் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறோம் - எ.வ.வேலு
சவுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்.
நேரமில்லா நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதை பதிவு செய்வது வழக்கம் தான்.
காசிமேடு மீனவர்கள் 80 பேர் சிறையில் அடைப்பு, அவர்களின் படகுகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்துள்ளது - எடப்பாடி பழனிசாமி
சட்டசபை கூடியது - அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
5 நாட்களுக்கு பிறகு மீனவர் உயிரிழப்பு தொடர்பாக பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.
சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது.
இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.