ஜல்லி, எம் சாண்ட் தேவை அதிகரிப்பு, பல குவாரிகள் மூடல் காரணமாக கட்டுமான பொருட்கள் விலை உயர்வு.
எம்.சாண்ட், ஜல்லி உற்பத்தி திறனை அதிகரிக்க தவெக அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? - எடப்பாடி பழனிசாமி
ரூ.12,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 150 நாட்கள் வேலை கொடுப்பது சாத்தியமில்லை - ஐ.பெரியசாமி
150 நாட்கள் வேலை அளிக்க வேண்டும் என்றால் ரூ.30,000 கோடி தேவைப்படும்.
தமிழ்நாட்டில் எந்த நதியும் ஓடவில்லை, அனைத்து பகுதிகளிலும் வறட்சி - ஐ.பெரியசாமி
மக்களுக்கு சேவையே முதலமைச்சரின் நோக்கம்.
எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை ஏற்க தயாராக உள்ளோம் - அமைச்சர் ஆனந்த்
நான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள் என்னை 7 முறை எம்எல்ஏவாக வெல்ல வைத்துள்ளனர்.
விபிஜி ராம் திட்டத்தில் 150 நாட்கள் வேலை தருவது சாத்தியமற்றது. ஏட்டு கத்தரிக்காய் கூட்டுக்கு உதவாது என்பது போல் இந்த திட்டம், அரசு அறிவித்தபடி 150 நாள் வேலை தர முடியுமா?
3 துறைகளில் நடந்த ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் உரிய நேரத்தில் வெளியிடப்படும் - முதலமைச்சர் விஜய்
நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டுமே என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கூறினார்.
ஊழல் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை வெளியிட வைத்து விடாதீர்கள் - முதலமைச்சர் விஜய்
ஊழல் தொடர்பான அனைத்தும் ஆதாரங்கள் எனது மேஜையில் அமைச்சர் வைத்துள்ளார் - முதலமைச்சர் விஜய்
தவறு நடந்து இருக்கலாம் என ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் ராஜ்மோகன்
வளமான கிராமங்களை உருவாக்கும் நோக்கத்தில் தான் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கொள்கை தலைவர் என சொல்கிறீர்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தமிழ்நாடு வளர்ச்சி திட்டம் என மாற்றியது நியாயமா? - ஐ.பெரியசாமி
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்? கொள்கைத் தலைவர் என கூறும் அண்ணா பெயரை மாற்றியது ஏன்? - ஐ. பெரியசாமி
அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது.
கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி.
கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும்.
வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான்.
வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கெனவே வீடு வைத்துள்ளவர்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளது - அமைச்சர் ஆனந்த்
திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்
வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது - ஐ.பெரியசாமி
தற்போது எம் சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்.
ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது - ஐ.பெரியசாமி
வீடுகள் முறையாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் வழங்குகிறது தவெக அரசு - புஸ்ஸி ஆனந்த்
வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை - புஸ்ஸி ஆனந்த்
திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட வீடுகள் அடித்தளத்துடன் நிற்கின்றன.
திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - புஸ்ஸி ஆனந்த்
திமுக ஆட்சியில வருடத்திற்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன - ஐ.பெரியசாமி
நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.
நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை - அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார்
சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்தில் எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு அதிமுகவினர் வெளிநடப்பு.
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.
நாடே மெச்சும் வகையில் முதலமைச்சர் அறிவிப்பு
ரூ.300 கோடியில் பெரம்பூரில் மருத்துவமனை அமைப்பதற்கு வரவேற்பு.
வடசென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் அறிவிப்பு
வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு
நான் ரெயிலில்தான் சட்டசபைக்கு வந்து செல்கிறேன். வேலையும் கொடுத்து காரும் கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி - எம்எல்ஏ சபரி ஐங்கரன்
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றம் - மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ் வரவேற்பு
பால் கொள்முதல் விலை உயர்வுக்கு திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து வரவேற்பு
முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி - அமைச்சர் ஷாஜகான்
முதலமைச்சர் விஜயால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் - அமைச்சர் ராஜ்மோகன்
ஏற்கனவே எம்எல்ஏ ஒருவருக்கு அனைத்துப்படிகளும் சேர்த்து ரூ.1.05 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சட்டமன்ற அமர்வுகள் நடக்கும்போது தினப்படியாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.
வாகனத்திற்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும்.
ஒரு உதவியாளரை நியமித்து கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்
ரூ.351 கோடி மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்.
5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் - முதலமைச்சர் விஜய்
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் மருத்துவ காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.
7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும்.
7 புதிய செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்.
முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும்.
பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்
ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38 -ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தி அறிவிப்பு -முதலமைச்சர் விஜய்
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.
பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்துவது அரசின் கடமை.
கடந்த காலத்தில் ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை - முதலமைச்சர் விஜய்
சட்டசபையில் விதி 110 கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிடுகிறார்.
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
சட்டசபையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.