தமிழக செய்திகள்

Tamil News Live: சட்டசபையில் 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் - 17 ஆகஸ்ட் 2026

சட்டசபையில் இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

மாலை மலர்

தவெக அரசின் லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது - செங்கோட்டையன்

பக்கங்கள் தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கை, லட்சியங்கள் குறையவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி

திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை

கலைஞரின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி.

திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க குறிப்பு தவெக ஆட்சியில் 300 பக்கமாக குறைந்துள்ளது.

சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மீதான மானிய கோரிக்கை மீதும் விவாதம் தொடங்கியது. திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.

அமைச்சர் அருண்ராஜ்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாள் இன்று.

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற மாபெரும் தூணை தூக்கிப் பிடிக்க என்னிடம் ஒப்படைத்த முதல்வருக்கு நன்றி.

சட்டசபையில் 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பதில்

சட்டசபையில் வருவாய்த்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.

மேகமலை விவகாரத்தில் திமுக குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்

திமுக அளித்த இறுதி அறிக்கை பெயரில் தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.

மேகமலை விவகாரத்தில் திமுக செய்த ஒட்டுமொத்த தவறின் காரணமாகத்தான் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

திமுக தவற விட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் - அமைச்சர் நிர்மல்குமார்

மேகமலை விவகாரத்தில் திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

15 ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர். கடந்த கால ஆட்சியில் இந்த வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை.

2025 முதல் 2026-ம் ஆண்டு வரை ஆய்வு செய்தபோது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார் உரை

2009 திமுக ஆட்சியில்தான் மேகமலை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டது.

2009-ல் காப்புக்காடாக அறிவித்தபோது திமுக முறையாக கையாண்டிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது.

மேகமலை விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த தவறுகளை தவெக அரசு செய்யாது.

மேகமலை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் தவெக அரசு மேற்கொள்கிறது.

தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உரை

மேகமலை - வருசநாடு மலைகிராம மக்களை வெளியேற்றுவததை ஏற்றுக்கொள்ள முடியாது.

உச்சநீதிமன்றத்தில் கடந்த கால அரசு சரியாக வாதாடாததே இந்த நிலைக்கான காரணம்.

கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பட்டா வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது - எம்எல்ஏ ராமச்சந்திரன்

உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை ராணுவம் கொண்டு வெளியேற்ற கூறியது வேதனை - எம்எல்ஏ ராமச்சந்திரன்

எம்எல்ஏ செல்லசாமி உரை

மேகமலையை காப்புக்காடு என அறிவித்த நிலையில் வனத்துறை அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது.

வனத்துறையினர் கெடுபிடிகள் காரணமாக விளைபொருளை விற்க கூட முடியாமல் மேகமலை மக்கள் தவிக்கின்றனர்.

சாலை, போக்குவரத்து, குடிநீர், பள்ளிக்கூடம், ரேஷன் உள்ளிட்ட வசதிகளை தமிழ்நாடு அரசே செய்து கொடுத்துள்ளது.

அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி

மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மேகமலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுத்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை.

மேகமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்து அப்பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.

மேகமலை விவகாரம் - தொடர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது - அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி

சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதால் நேரம் வீணாகிறது - எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என கூறி பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

திமுக ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு தவெக அரசே விருது தந்தது ஏன்?- உதயநிதி

இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எதற்காக நாங்கள் அமர்த்திய அதிகாரிக்கு முக்கிய பதவி தந்தீர்கள்? - உதயநிதி

திமுக ஆட்சியை குறை சொல்ல புகைப்படம் காட்டும் அமைச்சரே நாங்கள் எடுத்த நடவடிக்கை குறித்து சான்று தருகிறார் - உதயநிதி

திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அமைச்சர் ஆதவ் பேச்சிற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி?

கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல - எ.வ.வேலு

கேள்வி நேரத்திலும் கவன ஈர்ப்பு தீர்மான நேரத்திலும் குற்றச்சாட்டு கூறக்கூடாது என்பது தான் பேரவை விதி - எ.வ.வேலு

கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கக்கூடாது - எ.வ.வேலு

போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாக தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தனர் என்ற அமைச்சர் ஆதவின் பேச்சுக்கு பேரவையில் அமளி

கடந்த திமுக ஆட்சியில் 40 சதவீத போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இது காவல்துறை கொடுத்த அறிக்கை - அமைச்சர் ஆதவ்

திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்ததாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு.

கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் உறுதியாக இல்லை.

போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு - அமைச்சர் ஆதவ்

நாங்கள் எழுந்தால் நீங்கள் பேசவே முடியாது என்று அமைச்சர் ஆதவ் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை

தவெகவின் 100 நாள் ஆட்சி, அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளம். தவெக ஆட்சியை உருவாக்கிய இளைஞர்கள், பெண்களுக்கு நாங்கள் என்றும் உண்மையாக இருப்போம்.

மாணவர் கொலை வழக்கு விசாரணையில் எவ்வித அழுத்தம் இருக்காது. முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு குழு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க தவெக அரசு உறுதியாக உள்ளது.

கோவை மாணவர் விவகாரம் - அமைச்சர் ராஜ்மோகன் உரை

கோவை மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் தனுஷ் கொலையில் எந்தவித சார்பும் இன்றி காவல்துறை விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர் கொலை விவகாரத்தில் சார்பு தன்மை இன்றி நேர்மையாக காவல்துறை விசாரணை நடைபெறும்.

கொல்லப்பட்ட மாணவர்ன தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும் - கே.என்.நேரு

திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என் அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.

ஸ்டேடியத்தில் நடந்தவற்றை பற்றி விளக்கம் அளித்துவிட்டேன், ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது.

திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது, அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா? - அமைச்சர் சரத்

மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா?

போதைப்பொருள் கடத்தல் மன்னன் விவகாரத்தில் திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது - உதயநிதி

ஐபிஎல் போட்டியில் தவெக அமைசசர் பவுடர் என உதயநிதி பேசியதும் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது - உதயநிதி

ஜாபர் சாதிக் உடன் திமுக ஆட்சியில் இருந்த முதல்வர் உடன் தொடர்பு என அமைச்சர் குற்றம்சாட்டியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போதைப்பொருள் குறித்து புகார் அளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை. போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்தால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம்.

கோவை மாணவன் அமுதன் கொலையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என நாம் அறிந்ததே.

போதைப்பொருள் கடத்தல் மன்னர் ஜாபர் சாதிக் உடன் கடந்த ஆட்சியில் முதல்வரின் குடும்பத்தினரிடம் தொடர்பு உள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார் உரை

அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளது.

போதைப்பொருள் புகார் தந்தவரின் தகவலை போலீசார் கசிய விட்டது என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்.

கோவை அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.

இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலில் தாக்கி உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் - தாரகை கட்பட்

காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கட்பட் உரை

இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில் போதைப்பொருளால் அசம்பாவிதம் நடக்கிறது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவ அமைப்புகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல் காவல்துறையை களை எடுத்து கரைபடியாத கரங்களாக கொண்டு வர வேண்டும் - எம்எல்ஏ செல்லசாமி

கஞ்சா போதை பழக்கமே கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் தாக்குதலுக்கு காரணமாக உள்ளது - எம்எல்ஏ செல்லசாமி

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்

பாமக எம்எல்ஏ கணேஷ் குமார்

போதைப்பொருள் 15 வயது மாணவர்கள் இடையே புழக்கத்தில் உள்ளது.

கடந்த ஆட்சியில் இருந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது.

மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

அதிமுக எம்எல்ஏ காமராஜ் உரை

விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டை புகார் தந்த மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவன் தாக்கப்பட்ட பின் விடுதியில் இருந்து வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மைதானத்தில் வைத்து மாணவன் அமுதனை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் குத்தியும் 20 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.

செல்போன் சம்பந்தப்பட்ட சீனியர் ஜூனியர் சம்பவம், கோஷ்டி மோதல் என காவல்துறை அதிகாரியே சொல்கிறார்.

போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்தார்.

கொலை மட்டுமல்ல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

100 நாள் சாதனை என பெருமை பேசும் தவெக அரசு, 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும் - உதயநிதி

கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் கொலை.

சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை.

கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் நடந்த கொலைகளை பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரை

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது.

கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கெனவே அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதலால் கொலை என கூறினார். இரு தரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை.

அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறினேன்.

போதைப்பொருள் புழக்கம் பற்றி தகவல் அளித்ததால் தான் அமுதன் கொலை என அவரின் பெற்றோர் திட்டவட்டம்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி

கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டுள்ளது - சபாநாயகர்

கோவை அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம் - திமுக எம்எல்ஏ வேலு

வளமான சமத்துவமான ஊழலற்ற தமிழ்நாடு என்ற கட்டமைப்பை முதல் 100 நாட்களில் செயல்படுத்தி உள்ளது தவெக அரசு - சபாநாயகர்

மக்களின் நாடித்துடிப்பை அறிந்து தவெக அரசு பல துறைகளில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது - சபாநாயகர்

100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள தவெக ஆட்சிக்கு பாராட்டு - சபாநாயகர்

சட்டசபையில் இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டசபை கூட்டத்தொடர் கூடியது.

மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடக்கம்