மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு நீட், CUTE உள்ளிட்ட எந்தவிதமான நுழைவுத்தேர்வும் வைக்கக்கூடாது.
சமூக நீதி, அரசு பள்ளி மாணவர், கிராமப்புற மாணவர், ஏழை மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு. நீட் கோச்சிங் என்பது மிகப்பெரிய வணியமயமாகி விட்டது.
இதுவரை நீட் தேர்வால் நாடு முழுவதும் 500 மாணவர்கள் உயிரிழப்பு, தமிழ்நாட்டில் மட்டும் 50 பேர் உயிரிழப்பு. இந்த முறை நீட் வினாத்தாள் கசிவு, அதன்பின் நடந்த தேர்வு நடைமுறைகளால் மட்டும் 13 மாணவர்கள் பலியாகி உள்ளனர் - சவுமியா அன்புமணி
நீட் ரத்து தீர்மானத்தை பாமக ஆதரிக்கிறது.
2006-ம் ஆண்டே நீட் தேர்வு கொண்டு வர இருந்தபோது அன்புமணி அதனை தடுத்தார்.
நீட்டில் 110 மதிப்பெண் எடுத்த மாணவர் வசதியாக இருந்தால் மருத்துவராகலாம்.
590 மதிப்பெண் எடுத்த ஏழை மாணவரால் மருத்துவராக முடியவில்லை.
ஆண்டுக்கு 23 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு மட்டுமே சீட் கிடைக்கிறது.
கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது பெரிய துரோகம். அரசுப்பள்ளி மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை
நீட் தேர்வால் ஏற்படும் மனஅழுத்தத்தால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சமூக நீதியின் வேரில் வெந்நீரை ஊற்றுகிறது நீட்.
நாடு முழுவதும் நீட் கோச்சிங் சென்டர்கள் புற்றீசல் போல் முறைத்துள்ளன.
நீட் மட்டுமல்ல எந்த படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கூடாது என்பது தான் எங்களது நிலைப்பாடு.
நீட் ரத்து தீர்மானத்தை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.
நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏ போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நமது மாணவர்களின் திறமையை குறைவாக மதிப்பிடாதீர்கள். தரமான கல்வியை கொடுத்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற செய்யுங்கள்.
நீட் தேர்வு மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையானது.
தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் தாழ்வுமனப்பான்மையுடன் பார்க்க வேண்டும்.
நீட் பயிற்சி முகாமை அரசே நடத்த வேண்டும்.
நீட் தேர்வு எழுதாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவர் ஆனவன் நான். ஐஆர்எஸ் ஆவதற்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியவன் நான் - அமைச்சர் அருண்ராஜ்
நீட் தேர்வால் பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. நீட் தேர்வு - விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பயிற்சி கிடைப்பதில்லை. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.
நீட் தேர்வில் தோல்வி அடைபவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் உள்ளது.
தமிழக சட்டசபையின் தீர்மானத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் - சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்
மருத்துவக்கல்வி திறமை உள்ள அனைவருக்கும் வேண்டும். மருத்துவக் கல்வி வசதி படைத்தவர்களுக்கான மட்டும் அல்ல.
முன்னர் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை - கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயின்றனர். தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மேம்பட்டது.
நீட் தேர்வால் சமூக சமநிலை கட்டமைப்பு சீர்குலைந்து விட்டது. ஒரு நாள் நடக்கும் தேர்வு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடாது.
நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் பலன் பெறுகின்றன.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்.
தமிழ்நாட்டை வழிநடத்திய திராவிட கட்சிகளின் மூத்த தலைவர்களின் அனுபவ பாடங்களை இளம் தலைமுறையினர் கேட்க வேண்டும்.
அரசியல் களத்தில் பார்வைகளும் பயணங்களும் வேறாக இருக்கலாம். ஆனால் அனுபவசாலிகளின் அறிவுரைகளை கேட்கலாம் - நித்தியானந்தன்
முதலமைச்சர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சியில் மைக்ரோ டெக் பார்க் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் கீர்த்தனா
வேட்டி, சேலை திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.300 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் விஜய் பாலாஜி
பரம்பிக்குளம் - ஆழியார் திட்டம் குறித்து தவறான புரிதல் உள்ளது. ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் 2.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கலாம்.
பிஏபி பிரதான மற்றும் கிளை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும்.
தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் - நித்தியானந்தன்
பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் வேண்டும். முழு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லாதது ஏமாற்றம் - நித்தியானந்தன்
பட்ஜெட் மீதான விவாதத்தில் கொமதேக எம்எல்ஏ நித்தியானந்தன் உரையாற்றினார்.
விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் குறைவு தான்.
மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும் - கால்நடைத்துறை அமைச்சர் கமலி உறுதி
நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட தவெக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் தான் மாவட்டம். விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.
முதல்வருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்
கானல் நீராக அரசு வேலை இருக்கும் நிலையில் அது குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
3000 பணியிடத்திற்கு 30,000 பேர் தேர்வெழுதும் நிலை, அந்தளவுக்கு வேலைவாய்ப்பு இன்றி இளைஞர்கள் தவிக்கின்றனர்.
அரசு பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தாலும் கூட பணி கிடைப்பதில்லை - சவுமியா அன்புமணி
தமிழ்நாட்டில் உள்ள 27,000 குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். 42,000 ஏரிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை 1 மீட்டர் அளவு தூர்வார வேண்டும் - சவுமியா அன்புமணி
ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 10 கிமீ ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம் நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.
ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை - சவுமியா அன்புமணி
வேளாண் பட்ஜெட்டில் மிகமிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு பாமக சார்பில் நன்றி, வாழ்த்துகள்.
கால்நடை, பால்வளம், நீர்ப்பாசனம் வேளாண்துறைக்கு பட்ஜெட்டில் மிகமிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் பெண்கள் பட்ஜெட் போடும்போது சாப்பாடுக்கு உரிய நிதி ஒதுக்காமல் இருப்பார்களா?
பட்ஜெட் மீதான விவாதத்தில் சவுமியா அன்புமணி உரையாற்றினார்.
பாமகவின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தி அமல்படுத்திய தவெக அரசுக்கு வாழ்த்துகள் - சவுமியா
பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச்சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி.
முன்னர் ஆட்சியில் இருந்தோர் பட்டா வழங்கியதாக கூறினார்கள். பட்டா உள்ளது இடம் எங்கே என கேட்கின்றனர் மக்கள்.
பட்டாவுடன் இடத்திற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என கூறி உள்ளோம் - கால்நடைத்துறை அமைச்சர்
முதல்வர் எப்போது அழைப்பார் என்ற நிலை மாறி தற்போது முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தாலே பயமாக இருக்கிறது - அமைச்சர் ஆனந்த்
மக்கள் குறையை சரிசெய்ததன் விளைவு தான் தவெக ஆட்சியில் உள்ளது - சூலூர் எம்எல்ஏ சுகுமார்
வார்த்தைகள் மற்றவரை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என எம்எல்ஏ சுகுமாருக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.
உங்களுக்கும் சிபிஐ வழக்குகள் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பதில் அளித்தார்.
திமுகவினர் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் என தவெக எம்எல்ஏ சுகுமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மூலதன செலவு குறைவாக இருக்கும்போது கடன் பெறுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது. திராவிட மாடல் உருவாக்கிய வலுவான அடித்தளத்தில் நிற்கும் தவெக அரசு அதன் பலனை பயன்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் மானியங்களும் மூலதன செலவில் குறைப்பும் தான் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க காரணம். நிதி, அதிகார பகிர்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை புலப்படுத்துகிறது தவெகவின் பட்ஜெட் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மாநில வரி வருவாயை உயர்த்த புதிய திட்டமோ அணுகுமுறையோ இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. வெள்ளை அறிக்கை தயாரிக்க காட்டிய முனைப்பை வருவாய் உயர்த்தும் திட்டத்திற்கு காட்டவில்லை.
திராவிட மாடல் அரசில் பொறுப்பான நிதி மேலாண்மை செய்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறை சொல்லக்கூடாது. அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது, கடன் வாங்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியது என்பதுதான் முக்கியம்.
தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்டத்தின் அடிப்படையில் எல்லை கோட்டை மீறி எந்த அரசும் கடன் வாங்க முடியாது. வருவாய் மதிப்பீட்டை கணிப்பது தொடர்பான தவெக அரசின் கணக்கீட்டில் நம்பிக்கை இல்லை.
மின் கட்டணம், நூல் கட்டணம் உயர்வு, நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் தூங்குகிறது. மாநிலத்தை திராவிட மாடல் அரசு கடன் கடலில் ஆழ்த்திவிட்டதாக பிரசாரம் செய்கிறது தவெக அரசு.
அடுத்த 50 ஆண்டுகள் வரை கடன் இன்றி யாரும் ஆட்சி செய்ய முடியாது என நிதித்துறை செயலரே கூறுகிறார். கடன் குறித்த முதலமைச்சர் விஜயின் விமர்சனம் தவறு என்பது தற்போது புரிகிறதா? என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.
பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.
வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.
கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர்.
தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதலமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தற்போது சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் நான் இருப்பதற்கு காரணம் ஸ்டாலின், எனவே அவர் படத்தை வைத்துள்ளேன் - ஓபிஎஸ்
5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓபிஎஸ் சொல்வதை போல் 3 மாதத்தில் சரித்திரம் படைக்க முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்
மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை - ஓபிஎஸ்
மாணவர் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பில்லை - ஓபிஎஸ்
அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய தேவையில்லை - ஓபிஎஸ்
ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓபிஎஸ், யார் படத்தை தற்போது வைத்துள்ளார் - ஆதவ்
செங்கோட்டையன் இடம் மாறினாலும் அவரது பாக்கெட்டில் புகைப்படம் மாறவில்லை.
ஓபிஎஸ் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார் - அமைச்சர் ராஜ்மோகன்
படத்தை காட்டி ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை - ஓபிஎஸ்
முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பதில்
இடம் மாறியதால் துதி பாட வேண்டாம் என ஓபிஎஸ்-க்கு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்.
மாணவர் இடைநிற்றலை தவிர்க்க நிதி ஒதுக்கீடு திட்டம் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
உரிமைத்தொகை உயரவில்லை, 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம் - ஓ.பன்னீர்செல்வம்
புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக் கொண்டே இருக்கிறேன் - ஓபிஎஸ்
திருப்புகின்ற பக்கமெல்லாம் திமுக ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன - ஓபிஎஸ்
பெயர் மாற்ற பட்டியல் போல் வெளியாகி உள்ளது தமிழக பட்ஜெட் - ஓபிஎஸ்
செய்வதை மட்டும் தான் சொல்வோம் என கூறி அள்ளித்தெறித்த வாக்குறுதிகளை தவெக அரசு மறந்துவிட்டது - ஓ.பன்னீர்செல்வம்
3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சட்டசபையில் இன்று 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
சட்டசபையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்!
* நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் மருத்துவ கனவு கொண்ட லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.