நீங்கள் 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.
5 வருடங்கள் ஆட்சியில் இருந்த திமுக 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?
200 தொகுதிகளில் வெல்வோம் என அடிக்கடி சொன்ன திமுக, விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி தேர்தல் அறிக்கையில் பேசவே இல்லை.
திமுக ஆட்சியில் தரமான அரிசிகள் வழங்கப்பட்டது. ஆட்சியர் தலைமையிலான குழு தான் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளித்தது - சக்கரபாணி
நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் திமுக ஆட்சியில் கையூட்டு பெறப்பட்டது. திமுக ஆட்சியில் ரேஷனில் தரப்பட்ட அரிசியை பயன்படுத்த முடியவில்லை என மக்களே கூறினர்.
ரேஷன் அரிசி தொடர்பாக புகார் வரும் நிலையில் அதனை சரிசெய்ய தொடர் நடவடிக்கை எடுக்கிறோம்.
வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் நடந்துள்ளது. திமுக 2 லட்சம் மின் இணைப்பு கொடுத்தது விவசாயிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. தவெக ஆட்சியில் மின்சாரமே வரமேட்டேங்குது.
நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரத்திற்கு திமுக ஆட்சியைவிட கூடுதலாக ரூ.8 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் குறித்து மானிய கோரிக்கையில் அறிவிப்பு - நிர்மல்குமார்
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த போகிறதா அரசு? நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்?
வேளாண் துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ.279 கோடி குறைத்து நிதி ஒதுக்கி உள்ளது தவெக அரசு.
திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கான செலவை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டதாக அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்.
தவெகவினர் படத்தை பார்த்து வந்தவர்கள், திமுகவினர் முரசொலி படித்து வந்தவர்கள். வேளாண்மை துறைக்கு திமுக ஆட்சியை விட குறைவாக ஒதுக்கி உள்ளது தவெக.
திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக் தெரிகிறது.
திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.
நெல் கிடங்குகள் கட்டவில்லை என அமைச்சர் ரமேஷ் தவறாக கூறினார். திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.
மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் போடப்பட்டதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் பேசினார்.
திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறந்த திரைக்கடை எழுதி உள்ளார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்னாச்சு?
நெல்லுக்கும் கரும்புக்கும் அரசு ஒரு விலை நிர்ணயித்தால் அதிகாரிகள் ஒரு விலை நிர்ணயித்தார்களே அது தெரியாதா?
திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? துன்பப்பட்டார்களா? என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.
திரைக்கதையை தயார் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
கிடங்குகள் வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர் - அமைச்சர் ரமேஷ்
திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இருந்து கருத்துக்களை பெற்றோம் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விவசாயிகள் வாங்கிய ரூ.21,000 கோடி கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயக்கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் தான் சொன்னீர்கள்.
ரூ.21,000 கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிவிட்டு வெறும் ரூ.6,000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக் திமுக அரசு உரிமைத்தொகை கொடுத்தது.
நான் முதல்வன் திட்டத்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக அதிகம் பேர் பயிற்சி பெறுகின்றனர்.
திமுக ஆட்சியில் திடீர் திடீரென மழை பெய்தது. தவெக ஆட்சியில் மழையே பெய்யவில்லை.
நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பாக தவெக - திமுக காரசார விவாதம் நடைபெற்றது.
எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்து தான் வாக்குறுதி அளிக்க வேண்டும்.
திமுக இடைக்கால பட்ஜெட்டில் கரும்புக்கு ரூ.4000 கொடுப்போம் என கூறி இருந்தோம்.
திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி கடன் தள்ளுபடி செய்தோம்.
விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை படிப்படியாகவே திமுக அரசு உயர்த்தியது.
திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் நெல்லுக்கு ரூ.2500, கரும்பிற்கு ரூ.3500 உயர்த்தி தரவில்லை.
புதிய ஆட்சி அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்தனர் விவசாயிகள். ஆனால் கிள்ளி தருகிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
வாய்க்கால் தகராறுக்கு கூட சரிசெய்து விட்டீர்களா என இரவு பகல் பாராது போன் செய்கிறார் முதல்வர் விஜய்.
நாங்களும் தினந்தோறும் டென்ஷனாகத்தான் இருக்கிறோம்.
கரும்பு டன்னுக்கு ரூ.4,500 கொடுப்போம் என தவெக வாக்குறுதி அளித்தது.
எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருப்போம். நீங்கள் ரிலா்்ஸாக இருக்கிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கரும்பு டன்னுக்கு ரூ.4000 கொடுத்தது வரலாற்றில் முதல்முறை. விவசாயிகள் நலனுக்காக வரலாறு படைத்துள்ளார் முதலமைச்சர் விஜய் - செங்கோட்டையன்
விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட ஆட்சி திமுக ஆட்சி - அமைச்சர் நிர்மல்குமார்
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார் -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
கொள்கையை பேசி பேசி மக்கள் மனதை பிடித்தவர்கள் திராவிட இயக்கத்தினர்.
பட்ஜெட்டில் மாற்றத்தை காணவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது.
கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் இன்றி வாழ்ந்தார்கள்.
தமிழக பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் தொடங்கியது.
தமிழ்நாட்டின் நிதிநிலை சரியாக இல்லை என விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.
நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.
பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2.600 வழங்கப்படும்.
கரும்புக்கான ஊக்கத்தொகை ஒரு டன்னுக்கு ரூ.709.50 உயர்த்தி வழங்கப்படும்.
வரலாற்றிலேயே முதல்முறையாக நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.156 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
தனித் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்காது என்பதால் சட்டமாக இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கோரிக்கை.
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜ்மோகன் உரையாற்றினார்.
மொழியின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்க்கும் கூட்டம் இது.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது உலகத்தாய் வாழ்த்து.
இனி பொது நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்கள், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும் அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும் அவரை வாழ்த்தும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.
தனித்தீர்மானத்தின் மீது ஐயூஎம்எல் எம்எல்ஏவும் அமைச்சருமான ஷாஜகான் ஆதரவு அளித்து உரையாற்றினார்.
மொழி உணர்வை சீண்டி பார்க்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.
முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்தது.
மாநில அரசுகள் பின்பற்றும் தனித்துவ விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு இருக்கக்கூடாது.
தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது பாமக எம்எல்ஏ சிவகுமார் உரையாற்றினார்.
பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்காக தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சி.
தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும் தீர்மானம் இது.
தமிழ் தேசியமும் திராவிடமும் வேறு வேறு என பேசும் அபாயகரமான அரசியல்.
முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது அமைச்சர் வன்னிஅரசு உரையாற்றினார்.
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விசிக ஆதரவு.
தமிழ்நாடு, தமிழர் என்ற அரசியல் தான் இன்றும் தொடர்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்எல்ஏவும் அமைச்சருமான விஸ்வநாதன் உரையாற்றினார்.
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் 8.5 கோடி தமிழ் மக்களால் ஏற்கப்பட்டுள்ளது.
மனேன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழுக்கு ஏற்பட்ட அவமானம்.
1981-ல் மதுரையில் 5-வது தமிழ்நாட்டை நடத்தியவர் எம்.ஜி.ஆர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல.
தமிழ் என்ற வரும்போது இந்த பேரவை ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழியின் தொன்மை, பண்பாட்டின் அடையாளம்.
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனம், அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்களின் உணர்வு.
முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ கோவி செழியன் உரையாற்றினார்.
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-ம் இடம் என்று சொல்லும்போது அவமானமாக இருக்கிறது.
தமிழ்மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர்.
முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளித்தது.
தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் வகையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
1891-ம் ஆண்டு சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணீயம் நாடக நூலின் பாயிரம்.
1970 நவம்பர் 23-ல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என அரசாணை கொண்டுவரப்பட்டது.
2021 டிச.12-ல் தமிழ்நாட்டின் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தின் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.
தமிழின் பெருமையை சொல்ல திருக்குறள் ஒன்று போதாதா?
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் கொடுப்பது தானே மாநில உரிமை.
தமிழ் என்று சொன்னாலே ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒன்றாக வந்து நிற்கும்.
தமிழ் மொழியின் பெருமைய பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது.
தாய் எப்படி புனிதமோ, அதை போன்றே தாய் மொழியும்.
தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் எனில் நாம் எல்லோரும் போற்றும் தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும்.
தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.
இந்தியாவின் நெற்றில் இருக்கும் பொட்டு தான தமிழ் மொழி.
தமிழும், தமிழனும் இல்லாத நாடு ஏது?
தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது நமது உயிர், உணர்வு - முதலமைச்சர் விஜய்
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என சட்டசபை ஏகமனதாக தீர்மானிக்கிறது.
சட்டசபை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் என்சிற கோமுகி மணியனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய தனித்தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது.