தமிழக செய்திகள்

Tamil News Live: சட்டசபையில் இன்று.. கைத்தறி, தொழிலாளர் நலன் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் - 1 செப். 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

மாலை மலர்

பெசன்ட் நகர் தேவாலய கொடியேற்ற விழா முடிந்த நிலையில் அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது ஏன்? - உதயநிதி

அமைதியாக நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்காதது ஏன்? - உதயநிதி

சென்னை பெசன்ட் நகரில் நடத்தப்படவிருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு தவெக அரசு அனுமதி மறுத்துள்ளது - உதயநிதி

தங்கை அனிதா கண்ட கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்.

அனைத்து மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நம் பக்கம் வரும் - அமைச்சர் ஆதவ்

நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி உயிர்நீத்த தங்கை அனிதாவின் நினைவு நாள் இன்று.

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், எங்கள் முதல்வர் விஜய் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை.

2029 தேர்தல் சூழ்நிலை நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் தூக்கி எறியப்படும் நாளாக மாறும் - அமைச்சர் ஆதவ்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 54,481 அங்கன்வாடி மையங்களில் 42,223 சொந்த கட்டிடங்களில் செயல்படுகின்றன.

எஞ்சிய அங்கன்வாடிகளுக்கும் அரசு இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி

தருமபுரி தொகுதியில் உள்ள பல அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டிடத்தில இயங்கி வருகிறது. புதிய அரசு கட்டிடம் தேவை - சவுமியா அன்புமணி

மதுரையில் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட உள்ளது - எம்எல்ஏ கார்த்திகேயன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்

எல்லா மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி கூடம், ஓடுதளம், நீச்சல் குளம் அமைக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் காயமடையாத வகையில் மேட் அமைத்து விளையாட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சிவகங்கை, நெல்லை மாவட்டங்களில் பாரம்பரிய விளையாட்டு தொடர்பான சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது - அமைச்சர் ஆதவ்

வேலவன் ஊராட்சியில் விளையாட்டு உபகரணம் வைப்பதற்காக புதிய கட்டடம் கட்டப்படும் என எம்எல்ஏ நாராயணன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்

சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரம் தொடங்கியது.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி Ban NEET வாசகம் கொண்ட கருப்பு டீ சர்ட் அணிந்து சட்டசபைக்கு வருகை.

நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்த அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருப்பு உடையில் வருகை.

சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கைத்தறி, துணிநூல், கதர் கிராமத் தொழில்கள், தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது.

மேலும் தமிழ்நாடு நகர் மற்றம் ஊரமைப்பு (திருத்தச்) சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.