முதலமைச்சர் விஜய் 
தமிழக செய்திகள்

Tamil News Live: சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் ஆவேச பேச்சு- 07 செப். 2026

சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளிக்கிறார்.

தமிழ்நாடு செய்திப்பிரிவு

தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை.

திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு.

திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்றபோது அரசியல் தலையீட்டால் எப்ஐஆர் பதிவதில் கால தாமதம் அனைவரும் அறிந்ததே.

கடலூர் எம்.பி சுரேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் மரணம், தற்கொலை என சித்தரிப்பு- முதலமைச்சர் விஜய்.

மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக உள்ள தவெக அரசு இனியும் அப்படி தான் இருக்கும்- முதலமைச்சர் விஜய்.

திமுக ஆட்சிக்காலத்தில் 4 ஆண்டுகள் மடிக்கணினி கொடுக்கவில்லை; ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தம்- முதலமைச்சர் விஜய்.

திமுக ஆட்சியில் மூடுவிழா கண்ட திட்டங்களுக்கு பட்டியலிட்டால் ஒரு நாளே போதாது.

திமுக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்திருப்பதால் தான் தேர்தலில் தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்- முதலமைச்சர் விஜய்

ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்.

திமுக அரசு பொறுப்பேற்றதும் அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் எதற்கு ரத்து செய்யப்பட்டது ஏன்?- முதலமைச்சர் விஜய்.

திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்.

செய்யும் தவரையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்.

கரூர் கேங்க் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்- முதலமைச்சர் விஜய்.

மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும். அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான். இறைவனும், இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான் இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய்.

ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய்

திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்

ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா? முதலமைச்சர் விஜய் கேள்வி

மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்

செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்

திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள்- முதலமைச்சர் விஜய்

குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?- முதலமைச்சர் கேள்வி

முன்னாள் அமைச்சருடன் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கை- முதலமைச்சர் விஜய்

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்

கட்சி நிதியில் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்

7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது- முதலமைச்சர் விஜய்

ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம் - முதலமைச்சர் விஜய்

அரசியல் பாரம்பரியம் தெரியுமா சீனியாரிட்டி தெரியுமா என பேசுவோர் குறித்து தான் மக்களுக்கு எடுத்து சொல்கிறேன். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படியுங்கள் - முதலமைச்சர் விஜய்

25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது- முதலமைச்சர் விஜய்

1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து முதலமைச்சர் விஜய் பேச்சு

திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசி வருகிறார்.

தமிழ்நாடு தான் என் வீடு, 8 கோடி மக்கள் தான் நமக்கு சொந்தங்கள்- முதலமைச்சர் விஜய்

எதற்கெடுத்தாலும் மிசாவை பார்த்தவங்க என்று பேசி வருகின்றனர், மிசா வரலாறு நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்

சட்டசபையில் ஜெயலலிதா பட்ட அவமானங்கள் நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்

பழிவாங்கும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை, அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை- முதலமைச்சர் விஜய்

பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசுவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்- முதலமைச்சர் விஜய்

ஒரு எம்எல்ஏ ஆர்தோ சர்ஜன் போல் பேசுகிறார், சட்டமன்றத்தில் எலும்பை உடைப்பாராம்- முதலமைச்சர் விஜய்

பெண்கள் உட்பட அனைவரையும் தரம் தாழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்

கருத்துரிமை, பேச்சுரிமையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்

அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்ந்து பேச வேண்டாம் என முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை துறை வாரியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் விஜய்

குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால் குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பது அவசியம்- முதலமைச்சர்

காவல்நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை- முதலமைச்சர்

போதைப்பொருள் தடுப்புப்படை நடவடிக்கைகளால் போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை அகற்றி இருக்கிறோம்- முதலமைச்சர் விஜய்

காவலில் எந்த மரணம் நடைபெற்றாலும் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்- முதலமைச்சர் விஜய்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு குற்றம் நடைபெற்றாலும் நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்

போதைப்பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்கள் கவனிக்காமல் இருந்ததால் தற்போது ஆழமாக வேரூன்றி நிற்கிறது- முதலமைச்சர்

ஊழலற்ற நேர்மையான ஆட்சி செய்வதே தவெக அரசின் நோக்கம், அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது- முதலமைச்சர் விஜய்

குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய்

கோவை அமுதன் கொலை, சென்னை தனுஷ்குமார் கொலை சம்பவத்தில் 36 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்

குற்றத்திற்கு போதை கலாச்சாரம் காரணம் என ஒற்றை வார்த்தை கூறி தப்பிப்பது நல்ல பண்பு அல்ல- முதலமைச்சர்

2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச் சம்பவங்களை கூறி ஒதுங்கிச் செல்ல எனது மனம் இடம் தரவில்லை- முதலமைச்சர் விஜய்

பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்

ஒவ்வொரு காவல் நிலையங்களும் தங்களுக்கு எல்லைக்குட்பட்ட மக்களின் நெருக்கமான தொடர்பாக ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்

சொத்து தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை கூட குற்றத்திற்கான காரணமாக இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்

அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியதல்ல- முதலமைச்சர் விஜய்

ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும் குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்

எதிர்க்கட்சியினர் கூறிய கருத்தாக இருந்தாலும் அதில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து சரி செய்வதில் பாகுபாடில்லை- முதலமைச்சர் விஜய்

யாரிடமும் சார்பின்றி நடுநிலை தவறாது நீதி வழங்குவதே சரியான ஆட்சி என திருவள்ளுவர் கூறியுள்ளார்- முதலமைச்சர் விஜய்

குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராயினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு- முதலமைச்சர் விஜய்

சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்

சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும்- முதலமைச்சர் விஜய்

சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை- முதலமைச்சர் விஜய்

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை தொடங்கியது.

2026-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்த சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஆனந்த்

எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் அரசினர் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்- இதனை தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கேள்வி எழுப்புவோம் - திமுக கொறடா எ.வ.வேலு திட்டவட்டம்

சட்டசபைக்கு உறுப்பினர்கள் வருகை.

காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்க உள்ளார்.

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

SCROLL FOR NEXT