நிதி அமைச்சர் மரிய வில்சன் 
தமிழக செய்திகள்

Tamil News Live: தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை உறுதியாக எதிர்ப்போம்- அமைச்சர்: 05 ஆகஸ்ட் 2026

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

மாலை மலர்

மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை பாதுகாப்பு, பருவநிலை மாற்ற பாதிப்பு குறைக்கும் வகையில் 2500 ஹெக்டரில் அலையாத்தி காடுகள் உருவாக்க திட்டம்.

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுமுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரியில் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்கம்.

தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற பெயிால் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்க புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிப்பு

விளையாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு

காவிரி டெல்டா சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என ஆய்வு செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு

சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.1762 கோடி ஒதுக்கீடு

நதிகள் மறுசீரமைப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, நதி மேற்பரப்பு சுத்தம் செய்ய திட்டம்.

பெண்ணையாறு- செய்யாறு, பெண்ணையாறு- பாலாறு, தாமிரபரணி வைப்பாறு திட்டங்களுக்கு திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.50 கோடி ஒதுக்கீடு

நதி இணைப்பு திட்டங்களுக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு

நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி ஒதுக்கீடு

காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

முல்லைபெரியாறு, ஆனைமலையாறு திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை

மேகதாது உள்ளிட்ட தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை உறுதியாக எதிர்ப்போம்- நிதி அமைச்சர் மரிய வில்சன்

எரிசக்தித்துறைக்கு ரூ.15,828 கோடி, மின்மானியத்திட்டம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விமானநிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு- பட்டாபிராம், பூந்தமல்லி- சுங்குவார் சத்திரம் மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,252 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.7,657 கோடி, செயல்திறன் இடைவெளி நிதியுதவிக்கு ரூ.2,650 கோடி ஒதுக்கீடு

சென்னை பயணிகளின் வசதிக்காக புதிதாக ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும். புதிய ஏசி மின்சார பேருந்துகள், பேருந்து பணிமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கீடு

சாலை விபத்துகளை தடுக்க, சாலைகளை பராமரிக்க, வாகன ஓட்டிகளை கண்காணிக்க பாதுகாப்பான சாலைஇயக்கம் அறிமுகம். AI மூலம் வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமீறல் கண்காணிப்பு, ரோந்து பிரிவு மற்றும் தீவிர காய சிகிச்சை மையம் அமைக்க திட்டம்.

நம்ம சாலை திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு. நம்ம சாலை செயலி மூலம் சாலை குறைபாடு பற்றி புகாரளித்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,117 கோடி ஒதுக்கீடு

பனை விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பையும், வருவாயையும் உறுதி செய்ய பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்- நிதியமைச்சர் மரிய வில்சன்

திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்

செயற்கை நுண்ணறிவு பாடத்திட்ட வடிவமைப்புக்கான குழு அமைக்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறைக்கு ரூ. 1,678 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவுத்திறனை ஊக்குவிக்க ரூ.163 கோடி ஒதுக்கீடு

நெல்லை, தூத்துக்குடியில் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.

மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு

ஆழ்கடல் மீன்பிடி தொழில் ஊக்குவிப்பிற்காக ரூ.12கோடி ஒதுக்கீடு

விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டததிற்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.57 கோடி ஒதுக்கீடு

பசுந்தீவன சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்திற்காக ரூ.13 கோடி ஒதுக்கீடு

மாநிலம் முழுவதும் உள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்க பட்ஜெட்டில் ரூ.13 கோடி ஒதுக்கீடு

தீவன விதை வங்கிகள் மற்றும் கிடங்குகள் அமைக்க ரூ.6.7 கோடி ஒதுக்கீடு

41 கால்நடை மருத்துவமனை கட்டடங்கள், 25 கால்நடை பல்நோக்கு மருத்துவமனைகள், 143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள் அமைக்கப்படும்.

கால்நடை மருத்துவத்திற்காக ரூ.122 கோடி ஒதுக்கீடு. கால்நடைகள் காப்போம் திட்டத்திற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு.

1.39 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் பணியில்லா கால உதவித்தொகைக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு

மீனவர்களுக்கு பணியில் இல்லாத கால உதவித்தொகை ரூ.6ஆயிரத்தில் இருந்து ரூ.7ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிப்பு

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 5 வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு 100 சதவீத மானித்துடன் வழங்கப்படும்.

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் பெண்களுக்கு 5 ஆடுகள் வழங்கப்படும்.

எந்த துறைக்கு எவ்வளவு நிதி

பள்ளிக்கல்வித்துறை ரூ.44,527 கோடி, உயர்கல்வித்துறை ரூ.8,393 கோடி, தொழிலாளர் நலத்துறை ரூ.2,022 கோடி, சிறப்பு திட்ட செயலாக்கம் ரூ.44,527 கோடி, கூட்டுறவுத்துறை ரூ.8,028 கோடி, வேளாண் துறை ரூ.14,984.

சமூக நீதித்துறை ரூ.3,937 கோடி, மாற்றுத்திறனாளி நலத்துறை ரூ.1,485 கோடி, சமூக நலத்துறை ரூ.9,818 கோடி, மருத்துவத்துறை ரூ.3937 கோடி.

டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டம்-ரூ.134 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளின் மின் மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டெலி மெடிசன் நெட்வொர்க் உருவாக்க ரூ.18.5 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுத்துறைக்கு ரூ.8,028 கோடி ஒதுக்கீடு

சுகாதாரத்துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு- பட்ஜெட்டில் அறிவிப்பு

5 மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

5 ஆண்டுகளில் 1000 தொலை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் - ரூ.33 கோடி ஒதுக்கீடு

கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு

ஒவ்வொரு மாவட்டத்திலும் தாய கேர் மையங்கள் அமைக்கப்படும்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் ஆயிரம் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்- ரூ.33 கோடி ஒதுக்கீடு

மண்ணின் மகள் திட்டம் ரூ.20 கோடி ஒதுக்கீடு

ஆன்றோர் மேம்பாட்டுத்திட்டம் ரூ.250 கோடி ஒதுக்கீடு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு

திருநர்களுக்கு திறன்பயிற்சி சுயத்தொழிலுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என அறிவிப்பு

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகளில் சுயதொழில் தொடங்க ரூ.50,000 கடன் வழங்கப்படும் என அறிவிப்பு

திருநர்களுக்காக 5 மாவட்டங்களில் அரண் தங்குமிடங்கள் அமைக்கப்படும்.

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகளில் சுயதொழில் தொடங்க ரூ.50,000 கடன் வழங்கப்படும் என அறிவிப்பு

தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த 500 அங்கன்வாடி அமையங்களுக்கு புதிய கட்டிடம்- பட்ஜெட்டில் அறிவிப்பு

யோகா உள்ளிட்டவையுடன் உருவாக்கப்படும் முதியோருக்கான இல்லங்கள் 12 மாவட்டங்களில் அமைக்க ரூ.6.6 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1485 கோடி ஒதுக்கீடு

இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1051 கோடி ஒதுக்கீடு

கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு

10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்- ரூ.50 கோடி ஒதுக்கீடு

பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் அமல்படுத்தப்படும்.

காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

அண்ணனின் சீர் திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் திட்டம் என பெயர்வைத்து பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் விஜய்- மரிய வில்சன்

காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.170 கோடி ஒதுக்கீடு

பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டு பயிற்சி வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு

11ஆம் வகுப்பு மாணவர்கள் 5.32 லட்சம் பேருக்கு ஹெல்மெட், வாட்டர்பாட்டில் வசதியுடன் ரூ.277 கோடி மதிப்பில் சைக்கிள் - பட்ஜெட்டில் அறிவிப்பு

5 ஆண்டுகளில் 24 ஆயிரம் மாணவர்களுக்கு AI வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு

TN சுடர் திட்டத்தில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள், 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள் உருவாக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு

போட்டி தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு

ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

உயர் கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு

அடுத்தாண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்- நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது- நிதியமைச்சர் மரிய வில்சன்

Drugs Free தமிழ்நாடு செயலி மூலம் போதைப்பொருள் பரவல் குறித்து புகார் அளிக்கும் வகையில் சிறப்பு செயல்பாடு

பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,524 கோடி நிதி ஒதுக்கீடு- மரிய வில்சன்

பள்ளி பாடத்திட்டம் மறு சீரமைப்பிற்காக கற்றலில் முதலிடம் தமிழ்நாடு திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

போதையில்லா தமிழ்நாடு செயலி உருவாக்கப்பட்டு தன்னார்வ குழுக்கள் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு

பெருந்தலைவர் காமராசர் சிறப்பு பள்ளிகள் திட்டத்திற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு- தரமான கல்வி வழங்க காமராஜர் சிறப்பு பள்கிள திட்டம் செயல்படுத்தப்படும்- அமைச்சர் அறிவிப்பு

மாடர்ன் பள்ளிகளை மேம்படுத்த ரூ.125 கோடி ஒதுக்கீடு

அரசு பள்ளிகளில் தூய்மையை பாதுகாக்கும் விதமாக சூப்பர் கிளீன் கேம்பஸ் திட்டம் என்ற புதிய அறிமுகம்- இத்திட்டத்திற்கு ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு

மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்பு கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரவு- நிதி அமைச்சர் மரிய வில்சன்

3,734 அரசுப்பள்ளிகளில் ரூ.2132 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கல் திட்டம் - இந்த ஆண்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்பிற்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தாய்மாமன் சீர் திட்டம் தொடங்கப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்

டெண்டர்களை கண்காணிப்பதன் மூலம் அரசுக்கு ரூ.15ஆயிரம் கோடி வருவாய் வர வாய்ப்பு- மரிய வில்சன்

த.வெ.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் மரிய வில்சன்

தமிழக அரசின் கடனுக்கான வட்டி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது- மரிய வில்சன்

மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசா தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம், இதற்கு முன்பு தொட்டவர்களையும் விடமாட்டோம்- மரிய வில்சன்

முதலமைச்சரின் பெயரை கேட்டாலே ஊழல்வாதிகள் அஞ்சி நடுங்குகின்றனர்- மரிய வில்சன்

தமிழகத்தில் அரசு டெண்டர்களில் வெளிப்படை தன்மை கொண்டு வரப்பட்டுள்ளன- மரிய வில்சன்

டெண்டர் விதிமுறைகள் பலவற்றை தளர்த்தி முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன- மரிய வில்சன்

தவெக அரசு பொறுப்பேற்ற நேரத்தில் ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதை வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளோம்- மரிய வில்சன்

நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்க தவெக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது- மரிய வில்சன்

புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் மிக குறைவாகவே உள்ளது- மரிய வில்சன்

வெற்றிக்கொள்கை ஆவணத்தில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது உறுதி- மரிய வில்சன்

தவெக வெற்றி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றியல்ல, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் வெற்றி-மரிய வில்சன்

2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற திட்டம்

சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் நிகழ்த்தி காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய்-மரிய வில்சன்

குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது த.வெ.க. அரசு

தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன- மரிய வில்சன்

விலையில்லா மின்சாரம் 200 யூனிட்களாக த.வெ.க அரசில் உயர்த்தப்பட்டுள்ளது- மரிய வில்சன்

தன்னை உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சூழ்ச்சிகளை வென்று ஜனநாயகனாக நிற்கும் முதலமைச்சருக்கு நன்றி- மரிய வில்சன்

3 மாதங்களில் சொன்னதை செய்து காட்டியுள்ளது த.வெ.க. அரசு- மரிய வில்சன்

பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் முதலமைச்சர்- நிதி அமைச்சர் மரிய வில்சன்

நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டும் அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய்- நிதி அமைச்சர் மரிய வில்சன்

முதலமைச்சர் விஜய்

2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் மரிய வில்சன்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை கூடியது.

பட்ஜெட் கூட்டத்தொடர் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், தி.மு.க. எம்எல்ஏக்களுடன் உதயநிதி ஆலோசனை.

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முண்டகக்கண்ணி ம்மன் கோவிலில் அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் பாலாஜி ஆகியோர் சாமி தரிசனம்.

முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிதி அமைச்சர் மரிய வில்சன்

அதிமுக எம்எல்ஏக்கள் அறையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வருகை

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வருகை

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்- முதலமைச்சர் விஜய் சட்டசபைக்கு வருகை

சட்டசபைக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை

2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.