தங்கம் விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் குறைந்திருந்தது. பின்னர் மாலையில் மேலும் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே 2-வது முறையாக மாற்றம் செய்யப்பட்ட விலை குறித்த தகவல்கள் அகற்றப்பட்டு, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் மட்டுமே குறைந்ததாக சொல்லப்பட்டது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 3 முறை விலை மாற்றம் கண்டு, மொத்தத்தில் கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
08-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,600
07-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,200
06-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,480
05-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600
04-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600
08-07-2026- ஒரு கிராம் ரூ.245
07-07-2026- ஒரு கிராம் ரூ.250
06-07-2026- ஒரு கிராம் ரூ.250
05-07-2026- ஒரு கிராம் ரூ.260
04-07-2026- ஒரு கிராம் ரூ.260