தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | தங்கம் விலை மீண்டும் உயர்வு - எவ்வளவு தெரியுமா?

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையில் இருக்கிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் விலை அதிகரித்து இருந்த சூழலில், நேற்று விலை குறைந்து இருந்தது.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 920-க்கும் விற் பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 860-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.340 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

07-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,880

06-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,920

05-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

04-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

03-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

07-04-2026- ஒரு கிராம் ரூ.255

06-04-2026- ஒரு கிராம் ரூ.260

05-04-2026- ஒரு கிராம் ரூ.255

04-04-2026- ஒரு கிராம் ரூ.255

03-04-2026- ஒரு கிராம் ரூ.255