கடந்த வாரம் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கம் காணப்பட்ட நிலையில் வார இறுதி நாளில் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று காலையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை மீண்டும் மாலையில் உயர்ந்தது. நேற்று காலையில் கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,810-க்கும், சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,10,480-க்கும் விற்பனையானது. இதையடுத்து தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்ந்தது. கிராமுக்கு ரூ.180 அதிகரித்து ரூ.13,990 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ. 1,11,920-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.13,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
06-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,920
05-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
04-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
03-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,800
02-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000
06-04-2026- ஒரு கிராம் ரூ.260
05-04-2026- ஒரு கிராம் ரூ.255
04-04-2026- ஒரு கிராம் ரூ.255
03-04-2026- ஒரு கிராம் ரூ.255
02-04-2026- ஒரு கிராம் ரூ.255