தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | தங்கம் விலை அதிரடி உயர்வு - இன்றைய நிலவரம்

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை ஏற்ற-இறக்கத்துடன் நீடித்த நிலையில், நேற்று முன்தினம் விலை மாற்றம் இல்லாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 820-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

05-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,560

04-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000

03-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000

02-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000

01-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,360

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

05-05-2026- ஒரு கிராம் ரூ.265

04-05-2026- ஒரு கிராம் ரூ.270

03-05-2026- ஒரு கிராம் ரூ.270

02-05-2026- ஒரு கிராம் ரூ.270

01-05-2026- ஒரு கிராம் ரூ.265